சீரியலைப் போலவே நிஜத்திலும் மரணம்... கதறி அழுத ரச்சிதா!
serial actress rachitha emotional video for venkat subha dead: வெங்கட் சுபா மறைவிற்கு, சின்னத்திரை நடிகை ரச்சிதா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். ரச்சிதா வெங்கட் சுபாவுடன் நாச்சியார்புரம் சீரியலில் ஒன்றாக நடித்தவர்.
serial actress rachitha emotional video for venkat subha dead: வெங்கட் சுபா மறைவிற்கு, சின்னத்திரை நடிகை ரச்சிதா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். ரச்சிதா வெங்கட் சுபாவுடன் நாச்சியார்புரம் சீரியலில் ஒன்றாக நடித்தவர்.
நடிகரும் எழுத்தாளருமான வெங்கட் சுபா மறைவிற்கு, சின்னத்திரை நடிகை ரச்சிதா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான வெங்கட் சுபா சனிக்கிழமை அதிகாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வெங்கட் சுபாவிற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை வெங்கட் சுபா உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
வெங்கட் சுபா, மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், பல தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
வெங்கட் சுபா மறைவிற்கு, சின்னத்திரை நடிகை ரச்சிதா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். ரச்சிதா வெங்கட் சுபாவுடன் நாச்சியார்புரம் சீரியலில் ஒன்றாக நடித்தவர்.
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரச்சிதா. பின்னர் நாச்சியார்புரம் சீரியலில் அவரது கணவர் தினேஷூடன் நடித்தார். தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகத்தில் ஆர்ஜே செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நாச்சியார்புரம் சீரியலில் தனக்கு அப்பாவாக நடித்த வெங்கட் சுபாவின் மறைவிறகு ரச்சிதா கண்ணீருடன் எமோஷ்னல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீரியலில் அவரது அப்பாவாக நடித்த வெங்கட் சுபா இறந்துவிடுவது போன்ற காட்சி வரும். அப்போது ரச்சிதா கதறி அழுது கண்ணீர் விட்டிருப்பார்.
அந்த வீடியோவை தற்போது பகிர்ந்து இருக்கும் ரச்சிதா, "நாங்கள் ஒன்றாக வேலை செய்த பதிவை இப்போது இந்த நிலையில் வெளியிடுவேன் என்று நினைக்கவில்லை…உண்மையில் பேரிழப்பு" என குறிப்பிட்டு உள்ளார்.
அடுத்ததாக, வெங்கட் சுபாவுடன் நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரச்சிதா, அதில் “இன்னும் எத்தனை பேர், இதுவே போதும், அவர் ஒரு ஜென்டில்மேன், என்னுடைய நலம்விரும்பி, எது நடந்தாலும் எனக்கு பக்கபலமாக இருப்பவர், அவரது இறப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.