Serial Actress Radhika Preeti Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 250 எபிசோடுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் ஆஸிமும், நாயகியாக ராதிகா ப்ரீத்தி என்பவரும் நடித்து வருகின்றனர்.

நாயகியாக நடித்து வரும் ராதிகா ப்ரீத்தியின் அப்பா ஒரு ராணுவ வீரராம். அதனால் அவரது கல்லூரிக்கு முன்னர் வரை 2 படங்கள் தான் பார்த்துள்ளாராம். இந்த படங்கள் அவரை சினிமாவில் நடிக்க ஆர்வத்தை தூண்டவே, கல்லூரியில் படிக்கும்போதே போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடியுள்ளார். ஒரு கன்னட படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைதுள்ளது. ஆனால் படமும் கம்பெனியும் சரி இல்லாததால் அதற்கு புள்ளி வைத்துவிட்டு மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

இதற்கிடையே, பட வாய்ப்பு கிடைக்கமால் அலைந்து வரும் அவரை வீட்டாரும், உற்றாரும், உறவினரும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் ஒரு பக்கம் கழுவி ஊற்ற கண்டு கொள்ளாதவர் போல் மீண்டும் தனது பயணத்தை துவங்கியுள்ளார். பின்னர் மீண்டும் ஒரு கன்னட படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே, அது அவர் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பையும் தேடித்தந்துள்ளது. அந்த தமிழ் படமும் பெரிய அளவில் அவருக்கு பெயரை ஈட்டவில்லை.

எனவே சீரியல் பக்கம் திரும்பிய ராதிகா ப்ரீத்திக்கு தொடர்ந்து அதில் நடிக்க பிடிக்கவில்லை. அம்மாவின் வற்புறுத்தலால் அவர் பங்கேற்கும் ஆடிஷனில் வேணுமென்றே ஏடா குடமாக பதில் சொல்லுவாராம். அப்படி இருந்தும் சீரியலில் நடிக்க அவரை செலக்ட் பண்ணிடாங்களாம். இந்த நினைவலைகளை பகிர்ந்துள்ள ராதிகா ப்ரீத்தி, “அன்னைக்கு மட்டும் அம்மா ‘சரி வரலைன்னா விடு’ன்னு சொல்லியிருந்தாங்கன்னா ‘பூவரசி’ இப்ப இங்க இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“