Raveena Daha goning to marry in Mouna Raagam Serial fans trolls Tamil News: மௌன ராகம் சீரியலில் சக்தியாக வரும் ரவீனாவுக்கு திருமணம் ஆகுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளன நிலையில், 17 வயதில் திருமணமா? என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Serial Actress Raveena Daha Tamil News: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்களாக உள்ளனர். அந்த வகையில் 'ராட்சசன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வரும் 'ரவீனா தாஹா'. இவர் ’கதை சொல்லப் போறோம்’, 'ஜில்லா', ’தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ராட்சசன் படத்தின் மூலம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தவிர, ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கிலும் இவர் நடித்திருந்தார்.
Advertisment
முன்னதாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ’பூவே பூச்சூடவா’ எனும் சீரியலில் நடித்து வந்த ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் வரும் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றவர், பிறகு சக்தி கதாபாத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கொரோனா லாக் டவுன் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்ட இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் சக்தியாக வரும் ரவீனாவிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தில் ரவீனா யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது ஒரு புறமிருக்க, உண்மையில் 17 வயது ஆகும் அவருக்கு திருமணமா? என்பது போன்ற கேள்விகளும், அப்போ இது குழந்தை திருமணம் தானே என்பது போன்ற கிண்டல் பதிவுகளும் ரசிகர்களால் பதிவிடப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“