தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர், நடனம் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இடையில் சிம்பு நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. இவர் உடல் எடை அதிகரிப்பு எனப் பல்வேறு விமர்சனம் மற்றும் பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதன் பின் மாநாடு படம் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து அவர் இப்போது படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'தக் லைப்' படத்தில் சிம்புவும் நடிக்கிறார்.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகையும், சிம்புவின் தீவிர ரசிகையுமான ரேமா அசோக், சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் தனக்குத் திருமணம் என்று தடாலடியாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 41 வயதாகும் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ரேமா இவ்வாறு கூறியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“