By: WebDesk
Updated: December 28, 2019, 08:00:31 AM
rekha jennifer husband gopinath suicide
Serial Actress Rekha’s husband commits suicide : பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39). இவர் அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா ஜெனிபர், டி.வி. சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் உள்ளார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று கோபிநாத் வேலை பார்த்த அலுவலகத்தில் விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து வியாழக்கிழமை அலுவலகத்தை திறந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் ஊழியர்கள்.
விரைந்து வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது பின்னர் தெரிய வந்தது. மொத்தம் 3 சாவிகள் உள்ள அந்த அலுவலகத்தின் ஒரு சாவி கோபியிடம் இருந்திருக்கிறது.
கோபிநாத்தும் ரேகாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரேகா தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கோபிநாத் கடந்த 6 மாதங்களாக ஜெ.ஜெ. நகரில் இயங்கி வரும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அப்போது அவருக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு கடன் பிரச்னைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார் கோபி.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ரேகாவிடம் வழக்கம் போல் தகராறு செய்து விட்டு அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.