Advertisment

பெரிய உதடுகள்... ஆப்ரேஷன் காரணமா? அதிரடி விளக்கம் கொடுத்த ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை ராதிகா டார்ச்சர் செய்வது போன்ற காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi serial, Reshma Pasupuleti says ready to marry fan but haves conditions, 'ரசிகரை கல்யாணம் பண்ணிக்க ரெடி, ஆனா...': விஜய் டி.வி சீரியல் நடிகை ரேஷ்மா கண்டிஷன், Baakiyalakshmi, Reshma Pasupuleti, Reshma ready to marry fan but haves conditions

ரேஷ்மா பசுபுலேட்டி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரயலில் ராதிகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது உதடு குறித்து நெட்டிசன்களின் கேலிக்கு பதில் அளித்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய சினத்திரையில் அதிகம் பேசப்படும் சீரியலாக அமைந்துள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் பலரும் தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நிலையில், சீரியலின் திரைக்கதையும் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தொடக்கத்தில் சீரியலின் மெயின் கேரக்டரான பாக்யாவும் – ராதிகாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது கோபி பாக்யாவை விட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் கோபியை ராதிகா டார்ச்சர் செய்வது போன்ற காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், ராதிகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி உதட்டில் சர்ஜரி செய்திருக்கிறாரா அல்லது லிப்ஸ்டிக் அந்த மாதிரி போட்டுள்ளாரா ஏன் இவ்வளவு பெரியதாக வித்தியாசமாக உள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பொது சரியாக இருந்த ரேஷ்மா இப்போது சர்ஜரி செய்து உடல் அமைப்பை மாற்றிவிட்டாரா என்று கேட்டு வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், உருவ கேலி என்பதை பலரும் செய்துகொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அதை கேட்டுக்கொண்டிருப்பவர்களின் மனம் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்து பார்க்கமாட்டார்கள். பொதுவாக நான் எந்த கமெண்ட்க்கும் ரியாக்ட் செய்ய மாட்டேன். ஆனால் இது போன்ற தப்பான கமெண்ட்களை கேட்டு மனம் உடைந்துவிடுகிறேன். சர்ஜரி செய்து உதட்டை பெரிதாக்கினீர்களா என்று கேட்கின்றனர்.

அப்படி சர்ஜரி செய்திருந்தாலும் அது என் விருப்பம். எனக்கு பிடித்ததை செய்திருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கஷ்டம். இப்போ உள்ள சூழ்நிலையில் சர்ஜரி என்பது பெரிய விஷயம் இல்லை. சாதரான மக்கள் கூட அதிகமான சர்ஜரி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பற்றி வெளியில் தெரியவில்லை. எனக்கு பிடித்த மாதிரி நான் இருக்கேன் அவ்வளவு தான்.

அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த மாதிரி இல்லை இல்லை குண்டாகிவிட்டதாக கூறி வருகின்றனர். ஆமாம். அதற்கு காரணம் எனக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. நான் ரொம்ப பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். தூங்குற நேரம் குறைவு. அதனால் என் உடம்பு கூடிடுச்சு. அதேபோல் உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சோர்ந்துபோய்விடாதீர்கள். நான் என்னை பற்றி அதிகமான நெகடீவ் கமெண்ட்களை சந்தித்தாலும் அது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் எனது மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறேன்  என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment