விஜய் டிவி நடிகருடன் விரைவில் கல்யாணம்… சீரியல் நடிகை சந்தோஷ அப்டேட்!

Serial actress Reshma muralidharan and madhanpandian marriage update: ரசிகர்களுக்கு சந்தோஷ அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை ரேஷ்மா; மதன் பாண்டியனை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்

கலர்ஸ் தமிழ் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன், விரைவில் தனது காதலர் மதன் பாண்டியனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். இந்த சீரியலில் சக்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரேஷ்மாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. சக்தி கேரக்டர் துறுதுறுவென இருந்ததால், ரசிகர்களுக்கு ரேஷ்மாவை மிகவும் பிடித்துப் போனது. பூவே பூச்சூடவா சீரியலும், ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் 1000 எபிஷோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.

நடிகை ரேஷ்மா சீரியலுக்கு வரும் முன், மாடலிங் துறையில் இருந்தவர். 2016 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ரேஷ்மா, அதன் பிறகு ஃபேசன் ஷோக்களில் பங்கேற்று வந்தார். சென்னையில் நடந்த ஃபேசன் ஷோவில் கலந்துக் கொண்டதன் மூலம் பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரேஷ்மா.

தற்போது ரேஷ்மா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற சீரியலில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் அபியாக ரேஷ்மா நடிக்க உள்ளார். பூவே பூச்சூடவா சீரியலைத் தவிர வேறு எந்த சீரியலிலும், கடந்த இரண்டு ஆண்டாக கமிட் ஆகாத ரேஷ்மா தற்போது, கலர்ஸ் தமிழ் டிவியின் அபி டெய்லர் சீரியலில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

ரசிகர்களுக்கு மற்றொரு சந்தோஷ அறிவிப்பையும் ரேஷ்மா வெளியிட்டுள்ளார். அது, பூவே பூச்சூடவா சீரியலில் உடன் நடித்த மதன் பாண்டியன் என்பவரை விரைவில் திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். ரேஷ்மாவும் மதனும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் குறித்த பேச்சு எழுந்ததுள்ளது. இருவரும் தங்கள் காதலை அறிவித்தப்போது ரசிகர்கள் அவர்களை வாழ்த்தினர். தற்போது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ரேஷ்மா முரளிதரன், ரசிகர்களோடு அடிக்கடி லைவ்வில் உரையாடுவார். அப்படியான சமீபத்திய இன்ஸ்டாகிராம் உரையாடலில், ரசிகர் ஒருவர், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்க, அதற்கு பதிலளித்த ரேஷ்மா, விரைவில் மதன் பாண்டியனை திருமணம் செய்ய இருப்பதாக பதில் கூறி ஸ்டேடஸ் வைத்துள்ளார்.

மதன் பாண்டியன், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பின்னர், ஜீ தமிழ் டிவியின் பூவே பூச்சூடவா சீரியலில் சுந்தர் என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர், ரேஷ்மாவுடனான காதலைப் பற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

அதில், “இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பானது. எனக்கு ரொம்ப ஸ்பெஷலான நபர், இனி என்றென்றும் என்னவளாகிறார். உங்கள் அன்பும் ஆசீர்வாதங்களும் தேவை” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். தற்போது, ரேஷ்மாவும் விரைவில் திருமணத் தேதி அறிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். இவர்களின் திருமணம் பற்றிய தகவல் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress reshma muralidharan and madhanpandian marriage update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com