Advertisment

'எனது அந்தரங்க வீடியோ ரிலீஸ் ஆனதாக என் தங்கையே சொன்னாள்': விஜய் டி.வி நடிகை ரேஷ்மா ஷாக்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.

author-image
WebDesk
Dec 31, 2022 19:04 IST
பாக்கியலட்சுமி சீரியல் புதிய ராதிகா இவங்களா? பிரபல நடிகை ஸ்டேட்மென்ட்

பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளதாக தனது தங்கையே தன்னிடம் கூறியதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisment

தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி., தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்., தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர்வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ராதிகா என்ற வில்லியாக பதிந்துள்ளார்.

சீரியலில் நடித்து வந்தாலும், தொடர்ந்து தமிழில் கோ 2, மணல்கயிறு 2 திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ளே உள்ளிட்ட படங்களிலும், வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.

இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் வெளியாக விலங்கு என்ற வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் ரேஷ்மா நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக தமிழில் 3.33 என்ற படத்தில் நடித்த ரேஷ்மா தெலுங்கில் ஹைவே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இதனிடையே ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேஷ்மா தன் மனஉளைச்சலுக்கு ஆளான சம்பவம் குறித்து பேசியுள்ளார். என்னுடைய சகோதரி எனக்கு போன் செய்து உன் அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளது என்று கூறினார். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். இதை கேட்டு எனக்கு ஆளே இல்லையே என்று சொன்னேன்.

அதன்பிறகு அந்த வீடியோவை எனக்கு அனுப்பிவை என்று சொன்னேன். அந்த வீடியோ எனக்கு வந்தவுடன் அதில் நான் இல்லை மார்பிங் செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். அதை என் சகோதரிக்கும் புரிய வைத்தேன். தயாரிப்பாளரான எனது தந்தை நடிகரான எனது சகோதரர் இருவரும் இதை புரிந்துகொண்டனர். திரை பின்னணி இல்லாத ஒரு எளிய பெண்ணுக்கு இது நடந்திருந்தால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார். கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை சென்றிருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema #Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment