பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா அந்த சீரியலில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகிய நிலையில், தான் நிறைமாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த ரித்திகா கணவருடன் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. இவர் முதலில் ராஜா ராணி சீசன் ஒன்றில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
இதுமட்டுமில்லாமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த ரித்திகா, மிகவும் பிரபலமானார். இதற்கு பிறகு, விஜய் டிவியில் டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்தார். ரித்திகாவுக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
இந்நிலையில், ரித்திகாவிற்கு விஜய் டிவி பிரபலம் வினு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, நடிப்பாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேட்டு வந்த நிலையில், ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்தார். ஆனால், அவர் திடீரென பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் விலகினார். அவருடைய அமிர்தா கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ரித்திகா, சில மாதங்களுக்குப் பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் ரித்திகா தன்னுடைய கணவரோடு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ரித்திகா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிறகு, வயிறு தெரிவது போல, புகைப்படம் எதுவும் வெளியிடாமல் இருந்தார். இப்போது அவருடைய கர்ப்பகால போட்டோ சூட் வீடியோ வெளியிட்டு ரித்திகா மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். நிறைமாத கர்ப்பினியான ரித்திகாவின் போட்டோஸ் மற்றும் வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைக் கூறி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“