சின்னத்திரையில் விஜய் டிவி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாது இதில் பங்கேற்கும் மற்றும் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான ராஜா ராணி சீசன் 2-பரபரப்பரபையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. போலீஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பெண் திருமணத்திற்கு பின் இந்த லட்சியத்தை எப்படி அடைந்தார் என்பதே கதை.


இதில் சந்தியா என்ற மெயின் ரோலில் முதலில் ஆல்யா மானசா நடித்து வந்தார். இடையில் அவர் கர்ப்பமானதை தொடர்ந்து, பிரசவம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில். அவருக்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் ரியா விஸ்வநாதன்.



ஆல்யா அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரியா குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்படித்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது சீரியலும் விறுவிறுப்பாக சென்றுகோண்டிருப்பதால், ரியாவின் நடிப்பும் பாராட்டை பெற்று வருகிறது.


நடிப்பு மட்டுமல்லாமல் சிறந்த டான்சராகவும் இருக்கும் ரியா அவ்வப்போது தனது டான்ஸ் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமல்லாது அவ்வப்போது தனது கெஷ்யூலவலான புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“