சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருப்பார்கள். இதனால் நடிகைகள் வெளியிடும் சிறு பதிவுகள் கூட இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம்.
Advertisment
அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மா ரோஷ்னி ஹரிப்பிரியனுக்கு இணையத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.
Advertisment
Advertisements
சின்னத்திரை நடிகைகளில் முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர்களில் ஒருவர் ரோஷினி ஹரிப்பிரியன். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.
தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். மேலும சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“