ஓலை குடிசை, கல்லு வீடா ஆச்சி; இப்போ புது வீடு, உள்ளே படி இருப்பது என் கனவு; சீரியல் நடிகை சஹானா ஹோம் டூர் வைரல்!

சீரியல் நடிகை சஹானா தன்னுடைய வீட்டை சுற்றிக்காட்டிக்கொண்டே தனது சீரியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

சீரியல் நடிகை சஹானா தன்னுடைய வீட்டை சுற்றிக்காட்டிக்கொண்டே தனது சீரியல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sahana

பிரபல சீரியல் நடிகை சஹானா தனது புதிய வீட்டை ஹோம் டூர் விடியோவாக டெலிவிகடன் யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த வீடியோவில் சஹானா தனது வாழ்க்கைப் பயணத்தையும், கனவு வீட்டைப் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

சஹானாவின் தற்போதைய ஆடம்பரமான வீடு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், அவரது ஆரம்ப வாழ்க்கை எளிமையானது. சென்னை வேளச்சேரியில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் தான் அவரது குடும்பம் வசித்து வந்துள்ளது. அவரது தாயார் அந்த வீட்டை மெல்ல மெல்ல கல் வீடாக மாற்றியுள்ளார். இத்தகைய கடினமான கடந்த காலத்திற்குப் பிறகு, இப்போது சஹானா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் புதிய வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இந்த வீட்டில் குடிபெயர்ந்து ஆறு மாதங்கள் ஆகின்றன என்றும் கூறியுள்ளார். 

சினிமாவில் வருவதுபோல், வீட்டின் உள்ளே படிக்கட்டு இருக்க வேண்டும் என்பது சஹானாவின் நீண்ட நாள் கனவாம். புதிய வீட்டில் அந்த கனவு நனவாகியுள்ளது. வீட்டின் நுழைவு வாயிலில், அவரது கணவர் மருத்துவர் என்பதையும், தனது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது என்பதையும் விளக்கும் கலைப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர் வீணை வாசிப்பது போன்ற ஒரு ஓவியமும் அங்கு உள்ளது. 

வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி சஹானா அலங்கரித்துள்ளார். குறிப்பாக, ஆன்லைனில் கண்டெடுத்த இசை தொடர்பான பொம்மைகள், குடும்பத்தின் இசை பாரம்பரியத்தை நினைவுபடுத்துகின்றன. கணவருடன் நேரம் செலவிட பிரத்யேகமாக ஒரு காஃபி ஸ்பாட் அமைத்திருந்தாலும், இருவரின் வேலைப்பளு காரணமாக அதை அதிகமாகப் பயன்படுத்த முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

Advertisment
Advertisements

வீட்டுச் சுற்றுலாவின் போது, சஹானா தனது கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். பத்து மாதங்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்து மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தனது பாட்டி இறந்த ஐந்தே நாட்களில் அவரது மகள் பிறந்ததையும் நினைவு கூர்ந்தார். மகள் பிறந்த பிறகு, 3-4 மாதங்களில் 15 முதல் 18 கிலோ வரை உடல் எடையைக் குறைத்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

வீட்டில் ஒரு சிறிய மருத்துவமனை அமைப்பைக் கொண்டிருப்பதைப் பற்றியும், அது தனது கணவருக்கு அவசரகால மருத்துவம் தேவைப்படும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சிகிச்சை அளிக்க உதவுகிறது என்றும் குறிப்பிடுகிறார். மேலும், 'குக் வித் கோமாளி' போன்ற சமையல் நிகழ்ச்சிகளில் சமைப்பவராகவோ, கோமாளியாகவோ பங்கேற்க விரும்புவதாகத் தனது ஆசையையும் அவர் தெரிவித்தார்.

Serial Sahana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: