மண மேடையில் அந்தப் பார்வை… அந்த வெக்கம்… தாலி கட்டும் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை

Azhagu Serial actress sahana sheddy viral video Tamil News: அழகு சீரியல் நடிகை சஹானா ஷெட்டி தனது காதலருடன் இருந்த வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அவர்களது திருமண வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

serial actress sahana tamil news: sahana sheddy marrige videos

serial actress sahana tamil news: தமிழ் டிவி சீரியல்களில் சன் டிவி சீரியல்களுக்கு என ஒரு தனியான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியல் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி அண்மையில் நிறைவடைந்தது. இந்த சீரியலில் நடிகை ரேவதி, தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இவர்களுடன், ஸ்ருதி ராஜ், விஜே சங்கீதா, லோகேஷ் பாஸ்கரன் என பலர் நடித்தனர்.

இந்த சீரியலில் ரேவதியின் மகளாக நடிகை சஹானா ஷெட்டி நடித்திருந்தார். பகல் நிலவு சீரியல் மூலமாக அறிமுகமான சஹானா ஷெட்டி அதற்கு பிறகு அழகுக்கு சீரியலில் நடித்து பாப்புலர் ஆனார். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறினார். இருப்பினும், தற்போது சன் டிவியின் கண்ணான கண்ணீர் சீரியலில் ஒரு ரோலில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் சஹானா ஷெட்டி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவரது காதலர் அபிஷேக் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இந்த ரொமான்ஸ் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழியவே வீடியோ இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மேலும், தனது காதலரை இவ்வளவு வெளிப்படையாக அறிமுகப்படுத்துகிறாரே சஹானா என எல்லோரும் ஆச்சர்யம் அடைந்த நிலையில், அவர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது என பிறகுதான் தெரிய வந்தது. அதனால் தான் இவ்வளவு நெருக்கமாக கணவருடன் இருக்கும் போட்டோவையும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் சஹானா. விரைவில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், சஹானா ஷெட்டியின் திருமண வீடியோக்ககள் தற்போது வைரலாகி வருகின்றன. விண்ணைத்தாண்டி வருவாயா பட பாடலுடன் தொடங்கும் இந்த வீடியோவில் சஹானா ஷெட்டியின் காதலர் அபிஷேக்-க்கு தாலி கட்டுவதற்கு முன்னர் அவரைப் பார்த்து ஒரு ரொமான்டிக் லுக் விடுகிறார். பதிலுக்கு அவரும் புன்னகை செய்கிறார். பின்னர் மாலை மாற்றி மகிழ்கின்றனர் மணமக்கள்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress sahana tamil news sahana sheddy marrige videos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com