scorecardresearch

பீரியட்ஸ் நேரத்திலும் டார்ச்சர் செய்த விஷ்ணுகாந்த்: சம்யுக்தா ஷாக் புகார்

சிப்பிக்குள் முத்து ’ சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் நடிகை சம்யுக்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்

Samyuktha Vishnukanth
சம்யுக்தா – விஷ்ணுகாந்த்

சீரியல் ஜோடி விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில், தற்போது சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கு விஷ்ணுகாந்த் பதில் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான  சிப்பிக்குள் முத்து ’ சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர் விஷ்ணுகாந்த் நடிகை சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருணமாகி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் இருவருமே தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்த திருமண புகைப்படங்களை நீக்கினர்.

இருவரும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது குறித்து வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று தனித்தனியாக வீடியோவில் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை குறி வரும் நிலையில், தற்போது சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கு விஷ்ணுகாந்த் பதில் அளித்துள்ளார்.

விஷ்ணுகாந்துக்கு 24 மணி நேரமும் ரொமான்ஸ் செய்துகொண்டிருக்க வேண்டும். நான் பீரியட்ஸ் டைமில் இருந்தபோது கூட விஷ்ணுகாந்த் என்னை கஷ்டப்படுத்துகிற மாதிரி நடந்துகொண்டார் என்று நடிகை சம்யுக்தா அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு பதில் கொடுத்துள்ள விஷ்ணுகாந்த் தனது பதிவில்,

பீரியட்ஸ் நேரத்தில் வலி அதிகமாக இருக்கும் என்று சம்யுக்தா எப்போதும் சொல்வார். அன்றும் அப்படித்தான் சொன்னார். அதற்கு நீ படுத்துக்கோ என்று சொன்னேன். அப்போது அவர் நடித்த சீரியல் ஓடிக்கொண்டிருந்ததால் அதை பார்ப்பதற்காக போகிறேன் என்று சொன்னபோது என்னிடம் கோபப்பட்டு என்னை திட்டி சண்டை போட்டார்.

அதை கேட்டு நான் இப்போது மட்டும் வலியில் உன்னால் சத்தமாக பேச முடிகிறதா? அப்போ நடித்துக்கொண்டிருக்கிறாரா என்று கேட்டேன். அப்போதூன் எங்களுக்குள் பிரச்னை வந்தது. அதன்பிறகு அவர் தன் வீட்டுக்கு போகிறேன் என்று தனது அப்பாவுடன் கிளம்பினார். அப்போது நானும் சரி என்று என்னுடைய காரை எடுத்து போக வேண்டும் என்று சொன்னேன். இதுதான் அந்த நேரத்தில் நடந்தது என்று கூறியுள்ளார்.

அதுபோல 24 மணி நேரமும் விஷ்ணுகாந்த் ரொமான்ஸ் மூடில்தான் இருப்பார் என்று சம்யுக்தா சொன்னதற்கு விளக்கம் அளித்த விஷ்ணுகாந்த்,  24 மணி நேரமும் அந்த மாதிரி எண்ணத்தில் யாராலும் இருக்கவே முடியாது. நானும் மனிதன் தான். திருமணம் ஆன பிறகு நாங்கள் பேசுவதற்கு கூட எங்களுக்கு பிரைவேசி கிடைக்கவில்லை. காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் அவருடைய அப்பா வந்து விடுவார், அதுதான் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னேன் என கூறியுள்ளார்.

கடந்த 2 வாரகாலமாக சம்யுக்தா – விஷ்ணுகாந்த இருவரும் பேசி வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serial actress samyuktha said vishnukanth charged sex doring periods time

Best of Express