பிரபல டிவி சீரியல் நடிகை தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவருடைய ரோமன்ஸ் புகைப்படங்களைப் பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் புகைச்சலில் அவரை விமர்சித்து கம்மெண்ட் செய்துள்ளனர்.
புதியதலைமுறையில் செய்திவாசிப்பாளராக அறிமுகமானவர் சரண்யா துரதி. செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்த சரண்யா துரதி, விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். தொடர்து, விஜய் டிவியி ஆயுத எழுத்து, ரன் அகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
நடிகை சரண்யா துரதி சீரியல்களில் மட்டுமல்லாமல் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சரண்யா துரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பணி மலையில் தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட ரோமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் “வாழ்வில்
நீ வந்தது விதியானால் நீயெந்தன் உயிரன்றோ” என்ற வரிகளுடன் சரண்யா இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சரண்யாவின் இந்த ரொமான்ஸ் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்களும் சில நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு சரண்யா துரதி மற்றும் அவருடைய ஆண் நண்பருடனான உறவு பற்ரி அறிந்திராத நெட்டிசன்கள் சிலர் அதிர்ச்சி அடைந்ததோடு, அவருடைய புகைப்படங்களைப் பார்த்து கடுப்பாகி புகைச்சலில் நெகட்டிவ்வான கம்மெண்ட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.