/indian-express-tamil/media/media_files/WVi8aKYbi5XEgNI7AGYk.jpg)
ஷபானா மும்பையில் பிறந்தவர். இவர் முதன்முதலில் 2016-ஆம் ஆண்டு மலையாளத் தொலைக்காட்சியில் 'விஜயதசமி' என்ற தொடர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், தமிழ்த் தொலைக்காட்சித் துறையில்தான் அவர் பெரும் புகழைப் பெற்றார். இந்நிலையில் அவர் ஜெ.எஃப்.டபள்யூ யூடியூப் பக்கத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்தத் தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஷபானா தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்தத் தொடர் மிக நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடியது. 'செம்பருத்தி' தொடருக்குப் பிறகு, சன் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் மனைவி' தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகினார்.
சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சீசன் 6-ல் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். அதில் மக்கள் மத்தியில் அவர் மேலும் பிரபலமானார். ஷபானா, நடிகர் ஆர்யனை நவம்பர் 11, 2021 அன்று காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். ஷபானாவும் ஆர்யனும் காதலித்து தங்கள் குடும்பங்களின் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஷபானா தனது பெயரை ஷபானா ஷாஜஹான் ஆர்யன் என மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் பேட்டியில் அவர் தனது கணவர் ஆரியனுக்கு சமைத்து கொடுத்ததை பற்றி பகிர்ந்துள்ளார். சபானா கூறியதாவது,"நான் உணவை மிகவும் விரும்பி சாப்பிடுவேன், அதே போல சமைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த உணவுகள் பிரியாணி, நெய் சோறு மற்றும் இறால் வறுவல். குறிப்பாக என் கணவர் ஆர்யன் பற்றி பேசும்போது, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னேன். நான் சமைக்கும்போது, 'நல்லா இல்லை' என்று அவர் சொன்னால், அவ்வளவுதான், 'சூப்பர்' என்று அவர் சொல்லும் வரை அவரை சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பேன். இது எங்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒருவிதமான அன்பு" என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.