Serial Actress Sonia Vikram Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அருவி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை சோனியா. இவர் முன்னதாக, ‘அழகி’ சீரியலில் அமைதியான குடும்பத்தலைவியாக `திவ்யா’ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
இதற்கிடையில், நடிகை சோனியாவுக்கு திருமணம் ஆனதால் சில காலம் சின்னத்திரையில் விலகி இருந்தார். இந்நிலையில், தற்போது அருவி சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
Sonia: The Journey of An Island Girl to a TV Star #Andaman @actresssonia https://t.co/7tcYBM35JD pic.twitter.com/BBwR9opneO
— Andaman Chronicle (@AndamanNews) July 14, 2017
தனது சின்னத்திரை ரீ-என்ட்ரி குறித்து சமீபத்தில் பேசியுள்ள சோனியா, “ரீ-என்ட்ரி கொடுக்கலாம்னு யோசிச்ச சமயம் கரெக்டா இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. என்னுடைய முதல் சீரியலும் சன் டிவியில் தான் ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து மறுபடி ரீ-என்ட்ரியும் சன் டிவியில் அமைந்தது கூடுதல் சந்தோஷம். இந்தத் தொடரில் நெகட்டிவ் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் ‘சார்விக்’ஸ் இட்லி / தோசை மாவு’ என்கிற ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், பிசினஸ், கெரியர் ரெண்டையும் தான் மேனேஜ் செய்துகொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் விஜயின் அம்மா ஷோபா தனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் என்றும் கூறியுள்ளார்.

“ஷோபா அம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். யாரு ஷோபான்னு யோசிக்கிறிங்களா… அவங்களே தான். விஜய் சாருடைய அம்மாவே தான். அவங்க என் கணவருடைய ஃபேமிலி ஃப்ரெண்ட். நான் கல்யாணம் ஆகிப்போன பிறகு அம்மாவும், நானும் க்ளோஸ் ஆகிட்டோம். அவங்க என்னை விட வயதில் மூத்தவங்களாக இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.

என்னோட பர்சனல் விஷயங்களையும், அவங்களுடைய பர்சனல் விஷயங்களையும் ரெண்டு பேருமே பகிர்ந்துப்போம். இதுவரை விஜய் சாரை பற்றி எதுவுமே அம்மாகிட்ட நான் கேட்டதும் இல்லை, பேசினதும் இல்லை. ஃப்ரெண்டா எங்களை பற்றி கதை பேசவே எங்களுக்கு டைம் இல்லை.சீரியல் டெலிகாஸ்ட் ஆனதும் ஷோபா அம்மா பார்த்துட்டு பாராட்டினாங்க.” என்று நடிகை சோனியா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“