ராஜா ராணி சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு விழா; நேரில் சென்று வாழ்த்திய தென்றல் நடிகை!

நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது. நடிகை ஸ்ருதிராஜ் இந்த வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது. நடிகை ஸ்ருதிராஜ் இந்த வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sridevi Ashok

நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதிராஜ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல வெற்றி சீரியல்களில் வில்லி கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

Advertisment

நடிகை ஸ்ரீதேவி அசோக், முதலில் சினிமாவில் தான் அறிமுகமானார். தனுஷ்  நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்ரீதேவி, அடுத்து கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.

சினிமா வாய்ப்பு பெரிய அளவில் இல்லாதாதல், டிவி சீரியல்கள் பக்கம் வந்த ஸ்ரீதேவி அசோக், சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கஸ்தூரி’ ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

இதற்கு அடுத்து, விஜய் டிவியில்  பிரிவோம் சந்திப்போம், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி  ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார்.  ஸ்ரீதேவி அசோக் தற்போது விஜய் டிவியில் பொன்னி, பிரிவோம் சந்திப்போம் சீரியல்களில் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

நடிகை ஸ்ரீதேவி அசோக் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தான், நடிகை ஸ்ரீதேவி அசோக் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். ஸ்ரீதேவி அசோக் தான் கர்ப்பமாக இருபதாகக் கூறி மகிழ்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது. நடிகை ஸ்ருதிராஜ் இந்த வளைகாப்பு விழாவிserல் கலந்துகொண்டு ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ருதிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: