கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸாக சென்று வளைகாப்பு நடத்தியுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. இவர் சன் டிவியின் பூவே உனக்காக சீரியலிலும் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவி,தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த் மற்றும் பாவனா நடித்த கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ரீதேவி, பூவே பூச்சூடவா, கல்யாணம் முதல் காதல் வரை, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அரண்மனை கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களின் சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்தார்.
ஸ்ரீதேவி, அசோக் சிந்தலா என்பவரை கடந்த 2018 ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்ரீதேவி மற்றும் கணவர் அசோக் தம்பதி கடந்த பிப்ரவரி 14 அன்று தங்களுக்கு குழந்தை பிறக்க போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இந்நிலையில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடிக்கும் நடிகை ஸ்ரேயா அஞ்சன், நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸாக அவருக்கு வளைகாப்பு நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இனிமையான சர்ப்ரைஸிற்கு மிக்க நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்த சர்ப்ரைஸ் நிகழ்வில் ஸ்ரீதேவியின் தோழிகளான ஸ்ரேயா அஞ்சன், ஈரமான ரோஜாவே புகழ் திரவியம், திரவியத்தின் மனைவி ரிது லெனோரா, சாய் பிரமோதிதா மற்றும் சிலர் கலந்துக் கொண்டு நடிகை ஸ்ரீதேவியை வாழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil