விஜய் டிவியில் வெளியான 'பொன்னி' சீரியலில் கதாநாயகியாக நடித்த வைஷ்ணவி, மற்றும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் கதாநாயகன் வெற்றி வசந்த், கடந்த ஆண்டு காதலாகி திருமணம் செய்து கொண்டு வாழ்நாளை ஒருசேர பகிர்ந்து மகிழ்ச்சியாகக் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் உறவின் அற்புதமான தருணங்களை பகிர்ந்து ரசிகர்களின் காதலையும் ஆதரவையும் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், சில ரசிகர்கள் அல்லது சமூக வலைதள பயனர்கள், 'சிறகடிக்க ஆசை' சீரியலில் வெற்றி வசந்த் மற்றும் மீனா கதாபாத்திரம் இடையே காணப்படும் கெமிஸ்ட்ரி மற்றும் கனவு காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அதைப் பற்றிய வீடியோக்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல், அந்தக் கதாபாத்திரங்களின் மேல் தோன்றும் ரசனை உணர்வுகளை வைத்து, வெற்றி மற்றும் வைஷ்ணவியின் நிஜ வாழ்க்கையைப் பற்றியும் தனிப்பட்ட கருத்துகள், விமர்சனங்கள், அவதூறுகள் போன்றவற்றையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-162340-2025-09-03-16-33-35.png)
இது, வைஷ்ணவி மற்றும் வெற்றி ஆகியோரின் தனிநபர் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருப்பதால், அவர்களுக்கு மனவேதனையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் கதைகளின் மேல் அன்பு காட்டுவது ஒன்று, ஆனால் அந்த உணர்வுகளை நடிகர்களின் நிஜ வாழ்க்கையோடு கலந்து அவதூறாக பரப்புவது முற்றிலும் தவறு என்பது இந்தச் சூழ்நிலையால் வெளிப்படுகிறது. சிலர், வைஷ்ணவியை உருவ கேலி செய்ததோடு, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, "வைஷ்ணவி வெற்றிக்கு பொருத்தமானவர் அல்ல" என விமர்சித்து உள்ளனர்.
இத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் பேச்சுகள் காரணமாக மனமுடைந்த வைஷ்ணவி, கண்ணீருடன் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில், "நாங்கள் பிரபலங்கள் என்பதால் ரசிகர்கள் எங்களைப் பற்றி அன்போடு பேசலாம், ஆதரிக்கலாம். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, இப்படி இருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என்று தகவல்களை பரப்புவது எவ்வளவு நியாயமானது?" என்று வேதனையுடன் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், தனது முக அழகு குறித்து சிலர் விமர்சித்ததைக் குறித்தும் பேசிய அவர், "நான் ஒரு கலைஞராக இந்தத் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். திருமணம் முடிந்து சில நாட்களுக்கு ஓய்வு எடுத்தால், 'நீ உன் புருஷன் காசுல உட்கார்ந்து திங்கிறியா?' என்று கேட்கிறீர்கள். நான் என் கணவர் காசில் சாப்பிட, அதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது. அதை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கண்ணீருடன் பேசியிருந்தார்.
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதும் உருவ கேலிகளும் பொழுதுபோக்காக மாறிவிட்ட நிலையில், அதனால் கலைஞர்கள், குறிப்பாக வைஷ்ணவி போன்றோர் மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 'பேக் ஐ டி' களில் இருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் குடும்பத்தையும் பாதிக்கின்றன. வைஷ்ணவி தனது பதிவில், “வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள். அது உங்கள் தன்மையையும் பொறாமையையும் காட்டுகிறது” எனக் கூறி, அவர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த உருக்கமான பதிவு, சமூக ஊடகங்களில் எல்லை மீறும் விமர்சனங்களைப் பற்றி அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நான் தண்டச்சோறா? ஊரான் வீட்டு காசுலயா உட்கார்ந்து சாப்பிடுறேன்? நெட்டிசன்கள் மீது கடுப்பான சீரியல் நடிகை!
விஜய் டிவி நடிகர்கள் வைஷ்ணவி சுந்தர் மற்றும் வெற்றி வசந்த் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவதூறு புகாரால் மனமுடைந்த வைஷ்ணவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.