/tamil-ie/media/media_files/uploads/2021/09/Va.jpg)
Serial Actress Vanitha Hariharan announced her Pregnancy Tamil News
Serial Actress Vanitha Hariharan announced her Pregnancy Tamil News : சமீப காலங்களில் சின்னதிரை பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் குட்டி தேவதைகளின் வரவையும் வரப்போகும் மழலை மொழியை நினைத்தும் பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது வனிதா ஹரிஹரன் இணைந்துள்ளார். வனிதாவும் அவருடைய கணவர் கார்த்திக் அசோக்குமாரும் இன்னும் சில மாதங்களில் ஈன்றெடுக்கும் குழந்தையை எதிர்பார்த்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Va1.png)
தெய்வமகள், கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை சீரியல்களிலும் மாயா, கீ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ள வனிதா, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓர் புகைப்படத்தைப் பகிர்ந்து, "ஆம், நான் விரைவில் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி" என்கிற கேப்ஷனையும் இணைத்திருக்கிறார்.
இவருடைய இந்த பதிவிற்கு கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா, நிஷா கணேஷ், திவ்யா ஸ்ரீதர், பவித்ரா ஜனனி மற்றும் பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, "உங்கள் எல்லா வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி. அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க முடியவில்லை மன்னிக்கவும். லவ் யூ" என்று பொதுவான பதிலைப் பதிவு செய்திருக்கிறார்.
வனிதா ஹரிஹரன் மற்றும் கார்த்திக் அசோக்குமார் இருவருக்கும் அக்டோபர் 2018-ல் திருமணம் ஆனது. திருமணமாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது கருவுற்றிருப்பதை நினைத்து இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.