சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வினுஷா தேவி. அதற்கு முன்பே சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகினாலும் பாரதி கண்ணம்மா முன்னணி சீரியல் நடிகையாக அவரை உயர்த்தியது.
Advertisment
சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜோலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.
Advertisment
Advertisements
சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த இவர், திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்பிரியன் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
பரபப்பாக சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மாவின் பேச்சை கேட்டு டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த டெஸ்ட்டில பாரதி உண்மையை தெரிந்துகொண்டார் என்றால் இந்த சீரியல் விரைவில் முடிவக்கு வந்துவிடும். இதனால் தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“