Advertisment

சீரியல் நடிகை ரேஷ்மா 2-வது முறையாக திருமணம்: மாப்பிள்ளை அவரேதான்!

கடந்த 2021-ம் ஆண்டு மதன் ரேஷ்மா இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reshma Madhan

சீரியல் ஜோடி ரேஷ்மா - மதன்

ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரேஷ்மா தொடர்ந்து பூவே பூச்சூடவா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் நாயகியாக ரேஷ்மா நடித்த நிலையில், நாயகனின் தம்பியாக மதன் நடித்திருந்தார். நாயகனை விட மதன் இந்த சீரியல் மூலம் பிரபலமானார்.

Advertisment

இதனிடையே நாயகனின் தம்பியாக நடித்த மதனுக்கும், நாயகி ரேஷ்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் குறித்து இணையத்தில் செய்திகள் வெளியாக தொடங்கியது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பல பதிவுகளும் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ரேஷ்மா - மதன் இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர்.

இதன் பிறகு இரு வீட்டாரும் கலந்து பேசிய நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மதன் ரேஷ்மா இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான இவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஒன்ஸ் அகைன் என்ற பதிவுடன் இருவரும் துளசி மாலை மாற்றிக்கொள்வது போன்று வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment