சின்னத்திரை ஸ்டார் ஜோடிகளான சித்து – ஸ்ரேயா மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. திருமணம் சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சித்து – ஸ்ரேயா ஜோடியும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. மேலும், திருமணம் சீரியல் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், இருவரும் எதுவும் கூறாமல் மௌனமாகவே இருந்தனர். ஆனால் ரசிகர்களால், சமூக வலைதளங்களில் இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் தான் அதிகமாக வைரலாகி இருந்தது. அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்தனர். அதுமட்டுமில்லாமல், இவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருந்தன.
தற்போது சித்து, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/sidhu-shreya.jpg)
இந்தநிலையில், சித்து–ஸ்ரேயா கல்யாணம் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மெஹந்தி ஃபங்ஷன் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து சித்து -ஸ்ரேயாவின் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், திருமண புகைப்படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil