Advertisment

டி.ஆர்.பி-ல் புதிதாக நம்பர் 1 இடத்திற்கு வந்த சன் டி.வி சீரியல்: சிறகடிக்க ஆசை சீரியலுக்கு சறுக்கல்

கடந்த வாரம் முதல் இடத்தைப் பிடித்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பாராத வகையில் 10 -வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Siragadikka Aasai

டி.ஆர்.பி-ல் புதிதாக நம்பர் 1 இடத்திற்கு வந்த சன் டி.வி சீரியல்

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே ஒரு பெரும் போட்டியே நடந்து வருகிறது. இந்த வாரம் டி.ஆர்.பி.யில் முதல் இடத்தைப் பிடிப்பது என்பதுதான் அந்தப் போட்டி. 

Advertisment

அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த வாரம் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், இந்த வாரம் சறுக்கியுள்ளது. சன் டிவியில் புதியாக ஒளிபரப்பாகியுள்ள கயல் சீரியல் டி.ஆர்.பி-யில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களைப் பார்க்கும் பார்வையாளர்களின் அடிப்படையில் இந்த ஆண்டு 41வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. 

இதில் யாரும் எதிர்பாராத வகையில், சன் டிவியில் புதியாக ஒளிபரப்பாகியுள்ள கயல் சீரியல் டி.ஆர்.பி-யில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வாரம் முதல் இடத்தைப் பிடித்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பாராத வகையில் 10 -வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.



முதல் 10 இடங்கள் பிடித்த சீரியல்களின் வரிசையைப் பார்க்கலாம். 

1, கயல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த வாரத்தில் 10. 81 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 

2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு 10.66 புள்ளிகளை பெற்று வந்திருக்கிறது. 

3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் 10.42 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. 

4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்தது. அதேபோல இந்த முறையும் 10.33 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. 

5, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிங்க பெண்ணே சீரியல் 10.28 புள்ளிகளை பெற்று இந்த முறை ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கிறது. 

6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.67 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. 

7, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்தது அதுபோலவே இந்த முறை 7.60 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. பாக்யாவின் வீட்டை விட்டு வெளியேறும் இனியா, ஈஸ்வரி.. ராதிகாவால் புது சிக்கல்.. கோபத்தில் எழில் 

8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.54 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது. 

9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.46 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. 

10, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.28 புள்ளிகளை பெற்று 10-வது இடத்திற்கு வந்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment