ஆடை அவிழ்க்க தயார்ன்னு போஸ்டர் அடிச்சு பிளாக்மெயில்; 5 லட்சம் கேட்டாங்க: கசப்பான அனுபவம் சொன்ன சேது அபிதா!

சேது நடிகை அபிதா தனது திரை வாழ்க்கையில் தனக்கு நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காதது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

சேது நடிகை அபிதா தனது திரை வாழ்க்கையில் தனக்கு நடந்த ஒரு சில கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காதது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
abitha

'திருமதி செல்வம்' தொடரில் நடித்த நடிகை அர்ச்சனா, தான் எடுத்த தவறான முடிவால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது குறித்தும், அதனால் ஏற்பட்ட வெளிப்படையாக சொல்ல முடியாத வலி குறித்தும் கலாட்டா தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை அபிதா (ஜெனிலா) தனது பட வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அவரது பிரபலமான சேது திரைப்படம் வெளியானபோது நடந்த ஒரு மோசமான சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நடிகை அபிதாவின் உண்மையான பெயர் ஜெனிலா. திரைப்படத் துறைக்காக பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் தனது கதாபாத்திரப் பெயரான அபிதா என்ற பெயரை பயன்படுத்தினார். பின்னர் உணர்ச்சிகள், அரசாட்சி, நம்நாடு போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.  சன் டிவியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இத்தொடருக்காக 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருதுகளை வென்றார். இந்நிலையில் அவர் தனது சினிமா குறித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு பத்திரிகை நிறுவனம், அவரது புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, அவரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக கூறினார். அவர் பணத்தைக் கொடுக்க மறுத்ததால், "சேது அபிதா ஆடை அவிழ்க்க தயார்" என்ற தலைப்பில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு, அவருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தினர். இந்தச் சம்பவம், அவரது வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டமாக அமைந்தது, இதனால் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தற்கொலை எண்ணம்கூட ஏற்பட்டதாகக் கூறினார்.

இப்படிப்பட்ட மன அழுத்தத்திலிருந்து மீள, அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாயார் மற்றும் சகோதரி, அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் ஆதரவால், இந்தச் சவாலான காலகட்டத்திலிருந்து மீண்டு, தனது வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையுடன் பயணிக்க முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

சேது திரைப்படத்தில் தனது பாத்திரம் பற்றிப் பேசுகிறார், அந்தப் பாத்திரத்திற்காக மக்கள் இன்றும் அவரை நினைவு கூர்வதாகக் கூறுகிறார். இயக்குநர் பாலா முதலில் மற்ற கலைஞர்களைப் பற்றி யோசித்ததாகவும், பின்னர் இந்தப் பாத்திரத்திற்கு இவரைத்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டார். நடிகர் ராமராஜனுடன் உணர்ச்சிகள் உள்ளிட்ட பிற திரைப்படங்களிலும் அவர் நடித்ததாக கூறினார். சரியான மேலாளர் அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) இல்லாததால், தனது திரைப்படத் தேர்வுகள் மோசமாக இருந்ததாக அவர் நம்பதாக கூறினார். 

Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: