கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து திரைத்துறையிலும் இது பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது.
இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் பெண் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், திரைத்துறையில் உள்ளவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியானால் திரைத் துறையில் அவர்கள் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சம்மந்தப்பட்ட நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு உறுதியானால் அவர்களுக்கு திரைத் துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதித்து தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "நடிகர் சங்கத்திடம் இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. பிரச்சனை வந்தால் எங்களிடம் வாருங்கள். புகார் அளிக்க விடாமல் யார் உங்களை தடுக்கிறார்கள்? எது உங்களை தடுக்கிறது?.
எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. அது எதிலும் கேள்வி கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள்? அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி போன்றொரு கமிட்டி இருக்க வேண்டும்” என்று நடிகை குஷ்பு கூறினார்.
என்று கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“