சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்யன் – அழகிய புகைப்படத்துடன் மகிழ்ச்சி

Shabana Shajahan –  Aryan aka Velu Lakshman divorce controversy; Aryan ends with pic Tamil News: நடிகர் ஆர்யன் ஷபானாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து, விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Shabana Aryan Tamil News: Aryan ends divorce controversy with beautiful pic

Tamil serial news: சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், அதில் சில சீரியல்கள் மட்டுமே இல்லத்தரசிகள் மனதை அதிகம் கவரும். அந்த வகையில், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சீரியல்களுள் ஒன்றாக ‘செம்பருத்தி’ சீரியல் உள்ளது. கடந்த 2017 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிகை ஷபானா ஷாஜஹான் செம்பருத்தியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஷபானா ஷாஜஹான், பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யன் என்கிற வேலு லட்சுமணனை காதலித்து வருவதாக கடந்த ஆண்டில் தெரிவித்து இருந்தார். பின்னர், இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இதனையடுத்து, திருமணமான சில வாரங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி இருந்தன. மேலும், நடிகை ஷபானா திருமணமான சில நாட்களில் சோகமான பதிவு ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் குழப்பங்களுடன் பல கேள்விகள் எழுந்தன.

தவிர, ஆர்யன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது. எனவே, ஷபானா – ஆர்யன் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆர்யன் ஷபானாவுடன் சேர்த்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து, ‘மகிழ்ச்சியான இரண்டாவது மாதம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மூலம் விவாகரத்து சர்ச்சைக்கும் சேர்த்து அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shabana aryan tamil news aryan ends divorce controversy with beautiful pic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com