சட்டவிரோதமாக எல்லையை தாண்ட வைக்கும் காதல்; ஷாரூக் கான் – டாப்ஸி நடித்துள்ள ’டுங்கி’ பட பாடல் வெளியீடு
ஷாரூக் கான் – டாப்ஸி நடித்துள்ள டுங்கி படத்தின் ஓ மஹி பாடல் வெளியீடு; மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் காக்க எப்படி எதையும் செய்யலாம் என்பதை எடுத்துக்காட்டும் பாடல்
ஷாரூக் கான் – டாப்ஸி நடித்துள்ள டுங்கி படத்தின் ஓ மஹி பாடல் வெளியீடு; மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் காக்க எப்படி எதையும் செய்யலாம் என்பதை எடுத்துக்காட்டும் பாடல்
டுங்கி படத்தில் ஷாரூக் கான் மற்றும் டாப்ஸி (புகைப்படம்: T-series/ YouTube)
ஷாருக்கான் மற்றும் டாப்ஸி நடித்துள்ள டுங்கி படத்தின் 5 ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. எல்லையே இல்லாத அன்பைப் பற்றிய இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஷாருக்கான் மற்றும் டாப்ஸி நடிப்பில் முன்னணி இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டுங்கி. இந்தப் படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதனையடுத்து டுங்கி படத்தின் 4 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் டிரெய்லர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், படக்குழு டுங்கி படத்திலிருந்து ஒரு மனதைக் கவரும் பாடலை வெளியிட்டுள்ளது. “ஓ மஹி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில் ஷாருக்கான் மற்றும் டாப்ஸி நடித்துள்ளனர். அரிஜித் சிங் பாடிய இந்த பாடலுக்கு, இசையமைப்பாளர் ப்ரீதம் இசை அமைத்துள்ளார். இர்ஷாத் கமில் பாடல் வரிகளுக்கு நடன அமைப்பாளர் வைபவி மெர்ச்சண்ட் டான்ஸ் அமைத்துள்ளார்.
Advertisment
Advertisements
“ஓ மஹி” என்பது எல்லையே இல்லாத அன்பைப் பற்றியது, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களைக் காக்க எப்படி எதையும் செய்யலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இரு நாடுகளுக்கிடையேயான எல்லைகளால் திணிக்கப்பட்ட சவால்களை முறியடிக்கும் ஷாருக் மற்றும் டாப்ஸியின் பயணத்தை இந்தப் பாடல் சித்தரிக்கிறது, ஒன்றாக வாழ்வதற்கான அவர்களின் உறுதியை வெளிப்படுத்துகிறது. இருவரும் பாலைவனத்தில் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயற்சிக்கின்றனர். ஒரு காட்சியில், வைபவியின் டான்ஸ் ஸ்டெப்களை கச்சிதமாக பின்பற்றி, தனது நடனத்தில் ஷாருக் ஈர்க்கிறார்.
பாடலின் அதிகாரப்பூர்வ சுருக்கம், “மனுவும் ஹார்டியும் ஒருவரையொருவர் கண்களைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்களின் இதயங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. வரவிருக்கும் டுங்கி படத்திலிருந்து ‘ஓ மஹி (பாடல்)’ வெளியாகிறது. ஷாருக்கான், டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் நடித்துள்ளனர். நட்பு, எல்லைகள், வீடு மற்றும் அன்பிற்கான ஏக்கம் ஆகியவற்றின் கதை.
ஷாருக்கான் தனது எக்ஸ் தளத்தில் பாடலைப் பகிர்ந்துகொண்டு, “சில நேரங்களில் நமக்கு வாய்ப்பு கிடைக்காது. சில நேரங்களில் நாம் வார்த்தைகளைக் காணவில்லை. இப்படி உணரும் அனைத்து காதலர்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம்...இப்போதே சொல்லுங்கள்...இன்று...நாளை, தினமும்... மேரே இஷ்க் பே ஹக் ஹுவா தேரா...லோ மே கயாமத் தக் ஹுவா தேரா... இந்தப் பாடலுடன். இந்தப் பாடலை உங்கள் காதல் பாடலாக ஆக்குங்கள்...என் காதலர் நண்பர்களே." என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“