ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா? சவால் விட்ட அம்மா, சாதித்த ஷாருக்கான்: ஆனா அவர் இன்ஜினியர் அல்ல!

ஷாருக்கான் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பே, அவர் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்  என்பது பலரும் அறியாத ஒரு தகவல். தனது அம்மாவுக்காக இதை செய்துள்ளார்.

ஷாருக்கான் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பே, அவர் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்  என்பது பலரும் அறியாத ஒரு தகவல். தனது அம்மாவுக்காக இதை செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shah rukh Khan

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான், தனது அம்மாவுக்காக ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாகவும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், உனக்கு விருப்பமான பாடத்தை படி என்று அம்மா சொன்னதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

Advertisment

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், பள்ளியில் ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அவரது நண்பர்கள் பலரும் அவர் வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான அர்ப்பணிப்பும், கவர்ச்சியும் அவரிடம் இருந்ததாகக் கூறியுள்ளனர். ஷாருக் டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தார் என்பதும், பிறகு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் ஊடகத் தொடர்பியல் (Mass Communication) பயின்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதே சமயம் அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்பே, அவர் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்  என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

2000-ஆம் ஆண்டில் பிபிசியில் கரண் தாப்பருடன் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ஷாருக், தனது பள்ளிப்படிப்பில் அறிவியல் படித்ததாகவும், ஆனால் கல்லூரியில் வேறு ஒரு பாடப்பிரிவில் சேர விரும்புவதாகவும் அம்மாவிடம் கூறியபோது, அறிவியல் படிப்பை தொடர விரும்பிய அவரது அம்மா, ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதிப் பார்க்கச் சொன்னார். ஷாருக்கும் அந்தத் தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு அம்மா நீ விரும்பியதை படி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் கூறுகையில், "நான் எனது வாழ்க்கைப் பாதையைத் தேர்வு செய்தபோது, என் அம்மா 'நீ அறிவியல் படிப்புக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நானும், 'சரி, நான் தேர்வை எழுதுகிறேன். ஆனால் நான் பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அப்போது, 'நீ பொருளாதாரம் படிக்க விரும்புகிறாயா? அப்படியானால், ஐஐடி நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா? இந்த இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வை உன்னால் எழுத முடியுமா?' என்று அவர் கேட்டார்.

Advertisment
Advertisements

நான் 'என்னால் முடியும் என்று சொன்னபோது. 'சரி, அதை எனக்கு செய்து காட்டு என்று அம்மா சொன்னார். அதற்காக நான் அந்த தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு என் அம்மா, 'நீ இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, இப்போது சென்று உன் பொருளாதாரப் படிப்பைத் தொடங்கு என்று சொன்னதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இதே நேர்காணலில், ஷாருக் தனது குடும்பம் ஒரு "தாராளமயமான" குடும்பம் என்றும், தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்றலாம் என்ற சுதந்திரம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர், தனது குழந்தைப் பருவம் பற்றிப் பேசுகையில், "அது அருமையாக, எளிமையாக, மிகுந்த சுதந்திரத்துடன் இருந்தது. எனக்கு ஒரு அக்கா உண்டு. நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒருபோதும் சொல்லப்பட்டதில்லை. எனது குடும்பம் மிகவும் தாராளமயமான குடும்பம்.

உண்மையில், மத போதனைகள், சடங்குகள், படிப்பு, தொழில் என எல்லாவற்றையும், 'உனக்கு எப்படி விருப்பமோ, அப்படிச் செய், அதில் மகிழ்ச்சியாக இரு, உன்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்' என்றுதான் எனக்கு சொல்லப்பட்டது. தொழுகை செய்வது நல்லது என்று என்னிடம் சொன்னார்கள்.  அதனால் நான் அதைச் செய்தேன். அவர்கள் சொன்ன விதம், அதை செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது. என் வாழ்நாள் முழுவதும், என் குழந்தைகளையும் அப்படி வளர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Shah Rukh Khan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: