நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஒன்றாக நடித்த பாடல் காட்சியில், இருவரும் தவறி விழும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஹாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் காம்போ எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பாடல் காட்சி ஒன்றின்போது, ஷாருக்கான் தீபிகாவின் கூந்தைலை சரி செய்வதும். இருவரும் நடனம் ஆடும்போது, தடுமாறி விழுவதுமான காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த காட்சியில் ஷாருக்கான் ரொம்ப ஸ்வீட்டாக நடந்துகொள்கிறார் என்றும், இருவரின் ஜோடி சூப்பராக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷாருக்கான் நடித்த ஓம் ஷாந்தி ஓம் படத்தில்தான் தீபிகா படுகோன் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் பல்வேறு படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.