ஆனந்த் அம்பானி திருமண விழா ‘ப்ரீ வெட்டிங்’ கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில், ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் உடன் நடனமாடியபோது, ராம் சரண் பற்றி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Shah Rukh Khan faces backlash over ‘disrespectful’ comments about Ram Charan at Ambani pre-wedding bash; RRR actor’s makeup artist reacts: ‘I walked out’
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், தொழில் அதிபர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சினிமா ஜாம்பவான்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அமீர் கான், சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன், பாப் ஸ்டார் ரிஹானா உள்ளிட்ட உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மூன்று நாள் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில், பெரியதிரையில் கூட யாரும் எதிர்பார்க்காத சில காட்சிகள் நடந்தது. அது பாலிவுட்டின் மூன்று கான்களின் சங்கமம் - ஷாருக்கான், சல்மான் மற்றும் அமீர்கான் மூன்று பேரும் மேடையில் நடனம் ஆடினார்கள்.
ஷாருக்கான், சல்மான் மற்றும் அமீர் மூன்று பேரும் ‘நாட்டு நாட்டு’ பாடலின் பிரபலமான ‘டான்ஸ் ஸ்டெப்’களை மேடையில் ஆட முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடும்போது ஷாருக்கான், உதவி கேட்டு ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடனம் ஆடிய ராம் சரணை அழைத்தார். ஆனால், ஷாருக்கான அதற்கு தேர்ந்தெடுத்த வார்த்தைகள்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஷாருக்கான் அப்படி என்ன வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தார் என்றால், “இட்லி, வடை ராம் சரண் எங்கே இருக்க” என்று நகைச்சுவையாக அழைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் வீடியோவைப் பகிர்ந்த ராம் சரணின் ஒப்பணைக் கலைஞர் ஜெபா ஹாசன, 24 மணி நேரத்திற்கும் மேலான ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இதற்குப் பிறகு நான் வெளியேறினேன். ராம் சரண் (@alwaysramcharan) போன்ற ஒரு நட்சத்திரத்தை மிகவும் அவமரியாதை செய்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜெபா ஹாசன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தென்னிந்திய கலைஞர்கள் பாராட்டப்படுவதில்லை அல்லது உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை” என்று கூறினார். மேலும், அந்த அறிக்கையில், “நாங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எல்லோரும் எங்களுக்கு 'குறைவாக' பணம் செலுத்த விரும்புவது வேடிக்கையானது, அதே நேரத்தில் அந்த கலைஞர் டெல்லி அல்லது மும்பையைச் சேர்ந்த கலைஞர் என்றால் அதே விஷயத்திற்கு மூன்று மடங்கு தொகையை வழங்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
இத்தனை பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தாலும், ஷாருக்கான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அம்பானி வீட்டு திருமண விழாவில், சனிக்கிழமை நடந்த இசை இரவு நிகழ்வில் ஷாருக்கான் தொகுப்பாளராகப் பங்கேற்று, தனது மனைவி கௌரி கானுடன் வீர்-ஜாரா (2004) படத்தில் இடம்பெற்ற “மெயின் யஹான் ஹூன்” பாடலுக்கு நடனமாடினார்.
இருப்பினும், இந்த நிகழ்ச்சி முடிவடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அம்பானி வீட்டு திருமண விழா கொண்டாட்டத்தின் முதல் நாளில் ஆர்.ஆர்.ஆர். பட நடிகர் ராம் சரண் பற்றி அவர் சல்மான் மற்றும் அமீர் ஆகியோருடன் நடனமாடியதைப் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது. பலர் அவரது கருத்துகளை விமர்சித்துள்ளனர், இது இனவெறி கருத்து என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். ராம் சரணின் மேக்கப் கலைஞர் ஜெபா ஹாசனும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஷாருக்கானிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அம்பானி விழாவில் ராம் சரணை அவமானப் படுத்தினாரா ஷாருக் கான்? நடந்தது என்ன?
ஆனந்த் அம்பானி திருமண விழா ‘ப்ரீ வெட்டிங்’ கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில், ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் உடன் நடனமாடியபோது, ராம் சரண் பற்றி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.