New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-2023-08-14T200905.162.jpg)
ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஹையோடா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள ஹயோடா ரொமான்ஸ் பாடலை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. ஷாருக்கான், நயன்தாரா ரோமான்ஸ் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஹையோடா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள ஹயோடா ரொமான்ஸ் பாடலை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. ஷாருக்கான், நயன்தாரா ரோமான்ஸ் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லீ, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஜவான் படத்தில் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஹையோடா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Shah Rukh Khan's return as the King of Romance is a treat for the heart and soul in 'Hayyoda' from #Jawan! Anirudh's soulful voice and Priya Mali's magical rendition of Nayanthara's vocals make this song a treat for the audiences! https://t.co/4Qf2VoT9Tr pic.twitter.com/d22vjLGPnm
— aamina@afrin (@aamina187) August 14, 2023
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அட்லீ பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்குவதால் இந்தியா முழுவதும் ஜாவான் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல, ஜவான் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ஜவான் படக்குழுவினர் புரோமோஷன்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். டீசர், மோஷன் போஸ்டர்ஸ், பாடல் உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் இறுதியில் வெளியான ஷாருக்கானின் வந்த எடம் பாடல் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
தற்போது ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள ஷாருக்கான், நயன்தாராவின் ரொமாண்டிக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹையோடா என்ற பெயரில் வெளியான இந்த பாடலில் நயன்தாரா மற்றும் ஷாருக்கானின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. ஹையோடா பாடலை தமிழில் அனிரூத்தும், இந்தியில் அர்ஜித் சிங் பாடியும் பாடியுள்ளனர். ஷாருக்கான் ஹயோடா பாடலின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தி பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பிறகு, நடிக்கும் படம் என்பதால், நயன்தாரா ரசிகர்களிடையே ஜவான் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.