/indian-express-tamil/media/media_files/2025/08/19/ridhi-kk-2025-08-19-15-23-30.jpg)
சினிமாவை பொருத்தவரை ஹீரோக்கள் எவ்வளவு வயதை கடந்தாலும், என்றும் இளமை என்று சொல்லும் அளவுக்கு, இளம் நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பார்கள். ஆனால் ஹீரோயின்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தவுடன், அம்மா கேரக்டரில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். இப்படி நடிக்கும்போது தான் ஜோடியாக நடித்த நடிகருக்கே அம்மாவாக நடிக்க வேண்டிய நிலையும் வரும் வயது வித்தியாசம் பார்க்காமல், அந்த கேரக்டரிலும் நடிப்பார்கள்.
அந்த வகையில், தனது 2-வது திரைப்படத்திலேயே தன்னை விட 20 வயது மூத்த நடிகர் ஒருவருக்கு அம்மாவாக நடித்துள்ளார் ஒரு நடிகை. அவர் தான் ரித்தி டோக்ரா. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் இளம் வயது ஷாருக்கானுக்கு ரித்தி டோக்ரா அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் நடிக்கும்போது ஷாருக்கானுக்கு வயது 58. அதே சமயம் ரித்தி டோக்ராவுக்கு 38 வயது தான். இந்தியில் சீரியல்களில் நடித்து வந்த இவர், லக்காட் பாக்தா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
இவர் நடித்த 2-வது திரைப்படம் தான் ஜவான். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள ரித்தி, இயக்குநர் அட்லியின் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எங்கு போகிறோம் என்பது எனக்கே தெரியாது என்றும், அங்கு போன பிறகுதான் அது ‘ஜவான்’ படப்பிடிப்பு என்பது தெரிந்தது. அட்லி எனக்குக் கதையைச் சொன்னபோது, ‘இந்தப் கேரக்டருக்கு நான் எப்படிப் பொருந்துவேன்? என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், படத்தில் இளமையான ஷாருக் கானுக்கு தாய். தீபிகா படுகோனே தான் அவருக்குத் தாயாக இருக்க படக்குழு விரும்பவில்லை, அதனால் நான் காவேரி அம்மாவாக ஆகிவிட்டேன்.
நான் ஒரு பாதுகாவலராக இருந்தேன். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கையில் இது ஒரு முறைதான் கிடைக்கும் வாய்ப்பு என நினைத்து, அதை நழுவ விடக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஷாருக்கான் எப்போதுமே இளமையுடன் இருப்பவர். நான் அவருக்குத் தாயாக நடித்தது எனக்கு இன்னமும் விசித்திரமாகத் தோன்றுகிறது. இது ஒரு கனவு போல் உள்ளது" என்று அவர் கூறினார்.
ஷாருக் கானுடனும், தீபிகா படுகோனேவுடனும் நடித்த அனுபவம் பற்றி ரித்தி டோக்ரா பேசும்போது, "ஷாருக் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பார்க்கவே நான் அந்தப் படப்பிடிப்பில் இருந்தேன். ஆனால், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது எனக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. அந்த நினைவுகளை அழிக்க வேண்டுமானால், நான் அவருடன் சேர்ந்து மற்றொரு படத்தில் நடிக்க வேண்டும்.
நான் காவேரி அம்மாவாக நடிக்க மிகவும் பயந்தேன். படப்பிடிப்பு முழுவதும் என் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் எனக்குப் பயம் அதிகமாகி, அது படமா அல்லது நான் ஒரு கனவில் இருக்கிறேனா என்று குழம்பினேன். ஏனென்றால், இது ஒரு சாதாரணப் படம் அல்ல, மிகப்பெரிய திரைப்படம். படப்பிடிப்பின் போது ஷாருக் கான் அருகில் இருந்தது என் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. நான் அவரிடம் பேசியதாகவே எனக்குத் தெரியவில்லை.
நான் ஒரு விருந்திற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றேன். ஆனால், அங்கும் அவரருகே செல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நண்பர்கள் மூலம் அவரைச் சந்தித்திருக்கலாமே என்று தோன்றுகிறது. அவருடைய மனைவி, மாமியார், குழந்தைகள் ஆகியோரைச் சந்தித்தேன், ஆனால் அவரைக் காண முடியவில்லை. இது எனக்கு ஒரு ஏமாற்றம்தான்" என்று அவர் வருத்தத்துடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாருக்கானுக்கு 60 வயதும், ரித்தி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.