scorecardresearch

மும்பை ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்ட ஷாருக்கான்; ரூ.6.88 லட்சம் வரி செலுத்திய பின் வெளியேற அனுமதி

மும்பை ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்ட ஷாருக்கான் மற்றும் குழுவினர்; அவர்களது உயர் ரக புதிய வாட்ச்களுக்கு ரூ.6.88 லட்சம் வரி செலுத்திய பின்னர் வெளியேறினர்

மும்பை ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்ட ஷாருக்கான்; ரூ.6.88 லட்சம் வரி செலுத்திய பின் வெளியேற அனுமதி

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த 5 பேர் ஆப்பிள் ஐவாட்ச் மற்றும் 6 உயர் ரக வாட்ச்களை எடுத்துச் சென்றதற்காக சனிக்கிழமை அதிகாலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் தனியார் முனையத்தில் சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினரால் (AIU) தடுத்து நிறுத்தப்பட்டனர், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 17.86 லட்சம் என்றும், ஷாருக்கான் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள், சுங்க வரியாக ரூ.6.88 லட்சத்தை செலுத்திய பிறகு, அதாவது பொருட்களின் மதிப்பில் 38.5 சதவீதத்தை செலுத்திய பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

AIU இன் ஆதாரங்களின்படி, ஷாருக்கான் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் ஷார்ஜாவில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பொது விமான முனையத்தில் இறங்கினர். “தனியார் விமானங்களுக்கான முனையத்தில் சிவப்பு சேனல் அல்லது பச்சை சேனல் எதுவும் இல்லை. ஒவ்வொரு லக்கேஜ்களும் ஜெனரல் ஏவியேஷன் டெர்மினலில் ஸ்கிரீனிங் செய்யப்படுகின்றன,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

அதன்படி, ஷாருக்கான் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் எடுத்துச் சென்ற லக்கேஜ்கள் திரையிடலுக்குச் சென்றன, அப்போது AIU அதிகாரிகள் உயர்தர கடிகாரங்கள் மற்றும் ஆப்பிள் ஐவாட்ச் ஆகியவற்றிற்கான ஆறு கேஸ்களைக் கண்டறிந்தனர்.

“ஆனால், அந்த கேஸ்களுக்குள் கடிகாரங்கள் எதுவும் இல்லை. ஆறு கேஸ்களில், நான்கு சிங்கிள் வாட்ச் கேஸ்கள், இரண்டு மல்டிபிள் வாட்ச் கேஸ்கள்,” என்று ஒரு அதிகாரி கூறினார், ”லக்கேஜ்களில், ரூ.74,900 மதிப்புள்ள ஆப்பிள் ஐவாட்சையும் கண்டுபிடித்தோம். இவை வரி விதிக்கக்கூடிய பொருட்கள், எனவே இந்த பொருட்களின் மொத்த மதிப்பில் 38.5 சதவீதத்தை செலுத்துமாறு அவர்களிடம் கேட்டோம்.

பாதுகாப்புத் திரையிடல் முடிந்ததும் ஷாருக்கானும் அவரது குழு உறுப்பினர்கள் நால்வரும் வெளியேறியதாக AIU இன் ஒரு வட்டாரம் தெரிவித்தது. ரவிசங்கர் சிங் என்று அடையாளப்படுத்திக் கொண்ட அவரது குழு உறுப்பினர்களில் ஒருவர், டெர்மினல் 2 க்கு அழைத்துச் செல்லப்பட்டார். “அவர் 6.88 லட்சத்தை சுங்க வரியாக செலுத்திய பிறகு, அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Shah rukh khan stopped mumbai airport luxury watches pay over rs 6 lakh

Best of Express