scorecardresearch

ஷாருக் கானுக்கு வில்லன்: விஜய் சேதுபதி சம்பளம் இத்தனை கோடிகளா?

தெறி, மெர்சல், பிகில் என விஜய் வைத்து தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய அட்லி அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

ஷாருக் கானுக்கு வில்லன்: விஜய் சேதுபதி சம்பளம் இத்தனை கோடிகளா?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல், பிகில் என விஜய் வைத்து தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய அட்லி அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ஜவான் படத்தில், நாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதிவும் நடித்து வருகின்றனர்.  

சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமான ஜபான் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் விஜய் சேதுபதி திரைத்துரையில் தனது அதிகபட்ச சம்பளத்தை பெற்றுள்ளார். கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தற்போது அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஜவான் படத்தில் நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது விக்ரம் படத்தின் வெற்றி காரணமாக தனது சம்பளத்தை ரூ.15 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக உயர்த்தியுள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay Sethupathi Tamil News: Vijay Sethupathi helped a lakh people secure employment via NGO

மேலும்அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதி இரண்டு படங்களை கைவிட வேண்டி இருந்ததாகவும், ஆனால் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் இந்திய சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதை கேள்விபட்டிருப்போம்.

நடிகர்களின் சம்பளத்தில் பேரம் பேசுவது வழக்கம் என்றாலும், சம்பளம் குறித்து எந்த விவாதமும் இல்லாமல் ஷாருக் விஜய் சேதுபதியை படத்தில் கமிட் செய்துள்ளார்.“ஷாருக்கான் திறமைகளை மதிக்கும் ஒருவர் மற்றும் ஒவ்வொரு நடிகரும் நல்ல சம்பளம் பெறத் தகுதியானவர் என்று கருதுபவர் விஜய்சேதுபதி இந்திய சினிமாவின் மிகவும் நம்பத்தகுந்த நடிகர்களில் ஒருவர்.

இதற்கிடையில், தீபிகா படுகோன் ஜவான் படத்தில் தனது கெஸ்ட்ரோலில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால், தீபிகா வயதான கேரக்டரின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Shahrukh khan jawan movie atlee director villain vijay sethupathi salary crores

Best of Express