Advertisment
Presenting Partner
Desktop GIF

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் சைத்தான் பட நடிகை : சிகிச்சைக்கு நிதி உதவி கோரும் குடும்பத்தினர்

சைத்தான் பட நடிகை அருந்ததி நாயர் பைக் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவர் சிகிச்சைக்காக நிதி உதவி கோரி அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arunthathi Nair

அருந்ததி நாயர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நடிகை அருந்ததி நாயரின் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில்,  அவரது உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று சக நடிகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான பொங்கி எழு மனோகரா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். தொடர்ந்து, விருமாண்டிக்கும் சிவணான்டிக்கும் என்ற படத்தில் நடித்த இவர், 2016-ம் ஆண்டு வெளியான விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

ஆங்கிலத்தில் படிக்க : Shaithan actress Arundhati Nair on ventilator support after road accident, family seeks financial aid: ‘We are going through more than what people are thinking’

சைத்தான் படத்தில் ஐஸ்வர்யா, ஜெயலட்சுமி என இரு கேரக்டரில் நடித்த இவர், அடுத்து கன்னிராசி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பத்மினி டோன்ட் திங் உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்துள்ள அருந்ததி நாயர், கடந்த 4 தினங்களுக்கு முன்பு, திருவனந்தபுரம் கோவளம் புறவழிச்சாலையில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

தனது சகோதரருடன் அருந்ததி பயணம் செய்த இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தில் அருந்ததிக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக உடல்நிலை மோசகமாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி தேவை என்று, அருந்ததியின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரம்பா ஜோசப் கூறியிருந்தார்.

இதனிடையே அருந்ததி நாயர் சிகிச்சைக்காக உதவி கேட்டு, நிதி திரட்டும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜி.பே நம்பருக்கு அவரது உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்காக அந்த எண்ணுக்கு போன் செய்வரை நிறுத்துங்கள் என்று ரம்பா ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த மார்ச் 18 அன்று, அருந்ததி நாயரின் சகோதரி ஆரத்தி நாயர் இன்ஸ்டாகிராம் பதிவில், தனது சகோதரி விபத்து காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில், அவதிப்படுவதை உறுதிப்படுத்திய நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் அருந்ததி நாயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உயிருக்குப் போராடுகிறார்என்று ஆரத்தி தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரம்யா ஜோசப் "அவளுடைய விலா எலும்புகள் உடைந்துள்ளன, அவளது கழுத்து எலும்பில் முறிவு உள்ளது, அவளது மண்ணீரல் சேதமடைந்துள்ளது மற்றும் இரத்தக் கட்டிகளும் உள்ளன" என அருந்ததியின் உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் வெளியிட்டிருந்தார். அருந்ததியின் சகோதரி ஆரத்தி கூறுகையில், சகோதரி சிகிச்சைக்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியபோது, ​​பலர் அவர்களை ட்ரோல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து தகவல் கேட்டு அருந்ததி நாயரின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள ரம்யா ஜோசப், எனது சமூகவலைதள பக்கத்தில் அருந்ததிக்கான நிதி திரட்டலுக்கான இணைப்பை இணைத்துள்ளேன், ஆனால் தயவு செய்து ஜி.பே (G-Pay) எண்ணுக்கு மேலும் தகவல் கேட்டு தொடர்ந்து அழைக்க வேண்டாம். மருத்துவ முறைகளை அனைவருக்கும் விளக்க முடியாத சூழ்நிலையில் குடும்பத்தினர் உள்ளனர். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை விட அதிகமாக நாங்கள் கடந்து செல்கிறோம், எனவே தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், ”என்று கூறியிருந்ததார்.

இதனிடையே  நிதி திரட்டும் பக்கம் செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடக தளத்திலிருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment