நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
90களில் கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகீலா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஆபாச படங்களில் நடித்துள்ளார். தனது இளமைக்காலத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை ஷகீலா தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
ஷகிலா போஸ்டர் ரிலீஸ்
தற்போது இவரது வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா கதாநாயகியாக நடிக்கிறார்.
November 2018
தற்போது இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நடிகை ரிச்சா சதா நகைகளாலேயே உடலை மூடியபடி தோன்றியுள்ளார். இந்தப் படம் 2019-ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.