கோவை கோர்வை காட்டனில் பாலிவுட் நட்சத்திரம் வித்யா பாலன்!

சிறப்பான திறமைகளை அடிப்படையிலேயே கொண்டுள்ளது நம் நாடு என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் வித்யா.

By: Updated: July 21, 2020, 12:34:29 PM

Shakuntala Devi e-promotions: Vidya Balan keeps it simple in Coimbatore cotton sari : வித்யா பாலன் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் சகுந்தலா. மனித கணினி என்று அழைக்கப்படும் பெங்களூரை சேர்ந்த கணிதவியலாளரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளனர். இந்த படத்தின் இ-ப்ரோமோசன் பணியில் ஈடுபட்டு வருகிறார் வித்யா பாலன். வீட்டை விட்டு வெளியிலே வராமல் இந்த படத்தின் ப்ரோமோசன்கள் ஜோராக நடைபெற்று வருகிறது. தன்னுடைய வீட்டில் அமர்ந்த வண்ணம் வித்யா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளது. அதில் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இந்த கோரப்பட்டு புடவை தான்.

மேலும் படிக்க : கைத்தறி நெசவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சிறுமுகை நெசவாளர்கள்!

புடவைகளை அதிகமாக விரும்பி உடுத்தும் நடிகைகளில் வித்யாவும் ஒருத்தர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். கோவை கோரப்பட்டு புடவை அணிந்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தின் கேப்சனாக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் #vocalforlocal என்று கூறி அதில் ”இந்த கோர்வை கோரா புடவை கோவை மாவட்டத்தில் தயாரிக்கப்படுவது. ஜரிகை பார்டருடன் நெய்யப்பட்ட இந்த புடவையை ஒவ்வொரு முறை உடுத்தும் போதும் இதன் மென்மை மேலும் கூடிக் கொண்டே செல்கிறது. கோவையில் நடைபெற்ற ஒரு சிறிய கண்காட்சியில் இதனை வாங்கினேன். சிறப்பான திறமைகளை அடிப்படையிலேயே கொண்டுள்ளது நம் நாடு என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Shakuntala devi e promotions vidya balan keeps it simple in coimbatore cotton sari

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X