நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
நடிகை ஷாலினுக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரரும் உள்ளனர். ரிச்சர்ட் ரிஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மோகன் ஜீ இயக்கத்தில் வெளியான ‘ திரெளபதி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடதக்கது. குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்து எடுத்த திரைப்படம் என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் முக்கிய விவாதங்களை உருவாகியதால், ரிச்சர்ட் ரிஷி பிரபலமாக அறியப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் நடிகை யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் யாஷிகா ஆனந்த் இவருக்கு கண்ணத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“