நடிகர் அஜித்குமார் பிறந்த நாளுக்கு நடிகை ஷாலினி டி.யு.சி.ஏ.டி.ஐ (DUCATI) பைக்கை, அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், இன்று அவரது 53 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாள் என்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கிறது. எல்லா வருடமும் தல பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்ந்லையில் இன்று நடிகர் அஜித், மனைவி ஷாலியினுடன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் ஷாலினி அவருக்கு பிடித்த பைக்கை, பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். ’DUCATI MULTISTRADA V4’ என்ற பைக்கை அவர் கொடுத்துள்ளார். இதன் விலை கிட்டதட்ட 23 லட்சம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பைக்குடன் மற்றும் 53வது பிறந்த நாளை குறிக்கும் வகையிலான அலங்காரங்களுடன் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.