Shalini Pandey : தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. அதோடு தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இளம் முன்னணி நடிகையாகவும் விளங்குகிறார். இருப்பினும் அவர் தமிழில் நடித்த 'கொரில்லா' மற்றும் '100% காதல்' பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
Advertisment
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
இதற்கிடையே விஜய் ஆண்டனி - அருண் விஜய் நடித்து வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் ஒப்பந்தமானார் ஷாலினி. இதனை மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ளார். 27 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர், ஷாலினி பாண்டே திடீரென 'அக்னி சிறகுகள்' படத்திலிருந்து விலகியதாகவும், இந்தப் படத்தில் மேலும் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
நடிகையை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ஷாலினி மீது கிரிமினல் புகார் அளித்ததாகவும், இந்த பிரச்சினையை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதால், தென்னிந்திய படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று ஷாலினி கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அவருக்கு பதிலாக 'அக்னி சிறகுகள்' படத்தில் அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். தற்போது வெளிநாடுகளின் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.