சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை தவறாக பயன்படுத்தும் போக்கு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
இந்நிலையில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்று திரட்டும் முயற்சியாக கடந்தாண்டு இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில் பல பெண்கள் தாங்கள் கடந்து வந்த கசப்பான சம்பவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர், திரைத்துறையினரும் இதில் இணைந்தனர்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பாடகி சின்மயி, பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கடினமான கதைகளை தனது ட்விட்டரில் ஷேர் செய்தார். அதோடு கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் கிளப்பினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/shalu-shamu.png)
இந்நிலையில் தற்போது இளம் நடிகை ஒருவர் தான் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.
பின்னர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினின் தோழியாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார் ஷாலு. அப்போது ஒருவர், “உங்களுக்கு மி டூ அனுபவம் எதும் உள்ளதா?” எனக் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஷாலு, “நானும் மீடூ பிரச்னையை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இது குறித்து புகார் தெரிவிக்க எனக்கு விருப்பமில்லை. காரணம் இந்த மாதிரியான பிரச்னைகளை எப்படி கையாள்வது என எனக்குத் தெரியும். அப்படியே செய்தாலும் என்ன நடக்கப் போகிறது. எதிரில் இருப்பவர் அதை ஒத்துக் கொள்வார் என நீங்கள் நினைக்கிறீர்களா?
/tamil-ie/media/media_files/uploads/2019/06/shalu-1559624422.jpg)
மிக சமீபமாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அந்த இயக்குநருடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டால் மட்டுமே எனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அப்ரோச் செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஷாலு ஷம்முவின் இந்த பதிலால் யார் அந்த இயக்குநர் என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!