பிக் பாஸ் தமிழில் அந்த நடிகைக்கு இடம் இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Shalu Shamu Tamil News: எனினும் டி.ஆர்.பி.யை குறி வைக்கும் சேனல் நிர்வாகம், ஷாலு ஷம்மு ரசிகர்களின் கொந்தளிப்பை கவனத்தில் கொள்ளாமல் இருக்குமா, என்ன?

Shalu Shamu In Bigg Boss Tamil 4: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. பிக் பாஸ் தமிழ் சீசன் 4-க்காக கமல்ஹாசன் தோன்றிய புரொமோ வீடியோவும் செம வைரல் ஆனது.

பிக் பாஸ் கடந்த சிசன்களில் 16 போட்டியாளர்கள் வரை கலந்து கொண்டனர். இந்த முறை நோய்த் தொற்றை கருத்தில் கொண்டு போட்டியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது குறித்து கடந்த சில தினங்களாக போட்டி அமைப்பாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிகின்றன.

இதுவரை வெளியான தகவல்படி, நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட சுமார் 12 பேர் போட்டியாளர்களாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

இப்போது இவர்களிலும் ஓரிருவருக்கு ‘கத்திரி’ போடும் முடிவில் அமைப்பாளர்கள் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஷாலு ஷம்மு, ரியோ ராஜ் ஆகியோருக்கு இடம் கிடைப்பது சிரமம் என தகவல்கள் வருகின்றன.

ஷாலு ஷம்மு சினிமாவிலோ, சின்னத்திரையிலோ பெரிதாக பெயர் எடுத்துவிட வில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் வீடியோ, போட்டோ மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஓவியாவுக்கு பிக் பாஸில் ஆர்மி உருவானது போல, இவருக்கு இப்போதே ஆர்மி இயங்குகிறது.

ஷாலு ஷம்மு நீக்கப்படலாம் என வெளியாகி வரும் தகவல்களால் அவரது ஆர்மி கொந்தளித்துப் போயிருக்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், பிக் பாஸுக்கு எதிராக போராடவும் தயங்க மாட்டோம் என சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்து பரிமாறி வருகின்றனர்.

எனினும் டி.ஆர்.பி.யை குறி வைக்கும் சேனல் நிர்வாகம், ஷாலு ஷம்மு ரசிகர்களின் கொந்தளிப்பை கவனத்தில் கொள்ளாமல் இருக்குமா, என்ன?

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shalu shamu tamil news shalu shamu bigg boss tamil 4 latest news

Next Story
உடல் முழுக்க கருப்பு மை: ஜூலி படுபயங்கர வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com