Shambhavy Gurumoorthy Tamil Newsசன் டிவியில் ஒளிபரப்பாகிய கண்மணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஷாம்பவி குருமூர்த்தி. குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக உள்ளார்.
நடிகை ஷாம்பவி, தமிழில் தாமரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான “விண்ணைத்தாண்டி வருவாயா” சீரியலில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். பின்னர், தெலுங்கில் “மல்லேஸ்வரி” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ஷாம்பவி பிரபலமான சீரியல் நடிகையாக மாறிப்போனார்.

இதன் பின்னர், இவர் சன் டிவியின் செம ஹிட் சீரியலான கண்மணி சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். இந்த சீரியலில் இவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது தெலுங்கில் தொடங்கியுள்ள புதிய சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஷாம்பவி.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாம்பவி, அவ்வவ்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், அவரின் சமீபத்திய பதிவில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைப் பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் ஷாம்பவி, ஷூட்டிங்கின் போது சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் தான் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அந்த சாப்பாட்டில் கடினமான பிளாஸ்டிக் இருந்ததாகவும், அதுவும் வடையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தான் தெரியாமல் சாப்பிட்டதால் பிளாஸ்டிக் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது என்றும், அதை மிகவும் சிரமப்பட்டு தான் வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இனி அந்த ஹோட்டலில் மற்றும் வேறு எந்த ஹோட்டலிலும் சாப்பாடு ஆர்டர் செய்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“