Shamili Sukumar Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றான ‘ரோஜா’ சீரியலில் வில்லியாக மிரட்டியவர் ஷாம்லி சுகுமார். இவர் முன்னதாக சன் டிவியின் தென்றல் சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘வாணி ராணி’ (தேஜஸ்வினி/தேஜூவாக), ‘ரோமாபுரி பாண்டியன்’ (இளவரசி கலைவாணி), ‘பாசமலர்’ (மல்லிகா), ‘பொன்னுஞ்சல்’ (ரேவதி), ‘வள்ளி’ (ஷாமிலி) மற்றும் ‘மாப்பிள்ளை’ (ஷாலு) ஆகிய சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரோஜா’ சீரியலில் வில்லத்தனத்தில் அனைத்து பெண் ரசிகர்களின் திட்டுக்களையும் வாங்கிய ஷாம்லி அவரது கதாபாத்திரத்தில் அனுவாகவே வாழ்த்து இருந்தார். இதனால் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். எனினும், ஷாம்லி கர்ப்பமாக ஆனதால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனவே, சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை ஷாம்லிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தியை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “காத்திருப்பு இறுதியாக முடிந்தது! எங்கள் இளவரசியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறி குழந்தையின் அழகான சிறிய கைகளின் படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“