ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்தில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ்பெற்ற பாடலை கிட்டாரில் வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஷேன் வாட்சன் இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Shane Watson stuns fans by playing Ilaiyaraaja’s En Iniya Pon Nilave on guitar, watch
வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர், வேறு மொழி பேசுபவர்கள் தமிழர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவர்களுக்கு சிறந்த வழி, அவர்களின் சினிமா மற்றும் பாப் கலாச்சாரத்தைப் பாராட்டக் கற்றுக்கொள்வதுதான். மூடு பனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் புகழ்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை கிட்டாரில் வாசித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தமிழ் ரசிகர்களின் பாராட்டையும் மகிழ்ச்சியின் வாழ்த்து மழையையும் பெற்று அவர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார்.
Shane Watson plays the prelude from Ilaiyaraaja's 'En Iniya Pon Nilave' on the guitar ❤️ pic.twitter.com/ih2hsZuRDz
— Balaji Duraisamy (@balajidtweets) October 23, 2023
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இது ஒரு நேர்காணலாக ஒளிபரப்பப்பட்டது. ஷேன் வாட்சனுக்கு இருக்கும் சிறப்புத் திறமை என்ன என்று நேர்காணல் செய்பவர் கேட்டபோது, அவர் கிடாரை எடுத்து இளையராஜாவின் “என் இனிய பொன் நிலாவே” என்ற பாடலின் பிரிலூடை வாசித்தார். இது தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தமிழ் ரசிகர்கள் ஷேன் வாட்சன், கிட்டாரில் “என் இனிய பொன் நிலாவே” பாடலை வாசித்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர்.
ஷேன் வாட்சன் 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரராக விளையாடி வந்தார். ஷேன் வாட்சன் ஏற்கனவே தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். ஆல்-ரவுண்டர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக 2018 ஐபிஎல்-ல் சி.எஸ்.கே அணிக்காக அற்புதமாக விளையாடினார். அந்த ஆண்டு சி.எஸ்.கே கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் விளையாடிய இன்னிங்ஸிற்காக ரசிகர்களால் அவர் இன்னும் பாராட்டப்படுகிறார். ஷேன் வாட்சன், காலில் பலத்த காயம் அடைந்திருந்தாலும் தொடர்ந்து விளையாடினார். அவர் போட்டியை இறுதி ஓவருக்கு கொண்டு சென்றார். ஆனால், சி.எஸ்.கே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பின்னர், அவரது சக வீரர் ஹர்பஜன் சிங், ரத்தத்தில் நனைந்த கால்சட்டையின் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். மேலும் வாட்சனுக்கு காயத்திற்கு ஆறு தையல்கள் போட வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.