Advertisment

இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் தாமதம் எனது தவறு அல்ல: இயக்குனர் ஷங்கர் விளக்கம்!

இயக்குனர் ஷங்கர் சமீபத்திய பேட்டியில், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் தாமதம் ஆனாதற்கு முழுவதுமாக அவரது தவறு அல்ல என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Indian 2 Shankr

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான், சமகால சமூகப் பிரச்சினைகளை எடுத்து சொல்வது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் காட்சி விளைவுகளை (VFX) தனது படங்களில் பயன்படுத்துவதிலும் பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் ஷங்கர் சமீப காலமாக பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க தடுமாறி வருகிறார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான அவரது கேம் சேஞ்சர் திரைப்படம், கடுமையாக விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisment

Read In English: Shankar claims delays of Indian 2, Game Changer not entirely his fault: ‘There are external factors’

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்ததால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான ஷங்கர், ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தால், ஏற்பட்ட காயத்தில் உப்பு தேய்க்கும் அளவுக்கு, கேம் சேஞ்சர் திரைப்படம் மாறியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில், வெளியான இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கி 6 வருடங்களுக்கு பிறகு வெளியானது. இதனால் ஷங்கர் ரீ-என்ட்ரி என்று என்று கூறப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டில், அவரது இரண்டு படங்களை வெளியாக உள்ளது. தற்போது கேம் சேஞ்சர் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்து இந்தியன் 3 படம் வெளியாக உள்ளது. இதன் மூலம் ஷங்கரின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ஒரே ஆண்டில், இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.

Advertisment
Advertisement

அதே சமயம் ஷங்கரின் பாரம்பரியமாக திட்டங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளியை பராமரிக்கிறார். ஒரு படத்தின் தயாரிப்பு அடுத்த படத்துடன்  சேராமல் பார்த்துக் கொள்வதை ஷங்கர் எப்போதும் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்தியன் படங்கள் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களும், அந்த வரிசையில் வருதை தவிர்க்க முடியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா தொற்றுதான் இந்தியன் படங்கள் தாமதமாக முக்கிய காரணம்.

இதன் காரணமாக கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் படமாக்க முடியா சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஷங்கர் இரு படங்களிலும் மாறி மாறி பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தான் இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் சூழலும், ஷங்கரின் இரு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகும் நிலையும் உருவாகியுள்ளது. இந்த படங்களின் தாமதம் குிறத்து சமீபத்தில் பேசிய ஷங்கர், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளி முற்றிலும் தனது தவறு அல்ல என்று கூறினார். மேலும், “ஒரு படத்தை முடித்த பின்னரே ஒரு புதிய திட்டத்தை எடுப்பதே எனது முடிவு. ஆனால் அதற்காக இவ்வளவு நேரம் எடுக்க வேண்டியதில்லை.

ஒரு படத்தை முடிக்க நான் எடுக்கும் அதிகபட்ச நேரம் ஒன்றரை ஆண்டுகள். அதற்கு மேல் சென்றால், அது நடிகர்களின் தேதிகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டவை உள்ளிட்ட வெளிப்புற காரணங்களால் ஏற்படுகிறது. ஒரு படப்பிடிப்பு ரத்து செய்யப்படும்போது, அனைத்து கலைஞர்களையும் மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல. மேலும், அவர்கள் திரும்பி வரும்போது, அவர்களின் தலைமுடி அல்லது தாடி தொடர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்படும் நேரத்தில், மழைக்காலம் தொடங்கக்கூடும், திட்டமிடல் கட்டத்திலேயே, கோடை மற்றும் மழைக்காலங்களில் நான் படமாக்கக்கூடிய காட்சிகளின்படி விஷயங்களைப் பிரிக்கிறேன். உதாரணத்திற்கு, நாம் அமிர்தசரஸில் படப்பிடிப்பு நடத்தினால், அங்குள்ள வானிலை பற்றி முன்கூட்டியே விசாரிப்பேன். வெயில் அதிகமாக இருந்தால், கலைஞர்களுக்கு அது கடினமாக இருக்கும். அப்போது ஏதாவது தவறு நடந்தால், அதில் இருந்து மீட்டெடுப்பது மிகவும் கடினம்  என்று கூறியுள்ளார்.

1993-ம் ஆண்டு வெளியான ஜெண்டில்மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர், 1994-ம் ஆண்டு காதலன் படத்தை வெளியிட்டார். அதன்பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியிட்ட ஷங்கர். 1996 இந்தியன், 1998 ஜீன்ஸ்,  ஆகிய படங்களை வெளியி்ட்ட நிலையில், அடுத்த ஆண்டே 1999-ல் முதல்வன் படத்தை வெளியிட்டார். 2003-ல் பாய்ஸ், 2005-ல் அந்நியன் படங்களை வெளியிட்ட நிலையில், 2007-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி: தி பாஸ் படத்தை வெளியிட்டார்.

சிவாஜிக்குப் பிறகு, எந்திரன் (2010) ஐ வெளியிட அவருக்கு மூன்று ஆண்டுகள் அடுத்த நண்பன் (2012), ஐ (2015) மற்றும் 2.0 (2018) ஆகியவற்றிற்காக மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுத்தார். ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியன் 2 வெறும் ரூ.148.83 கோடியை மட்டுமே வசூலித்ததாக தொழில்துறை கண்காணிப்பாளர் சாக்னில்க் தெரிவித்துள்ளார். ஒப்பிடுகையில், ரூ.450 கோடி பட்ஜெட்டில் வெளியான கேம் சேஞ்சர், முதல் ஆறு நாட்களில் உலகளவில் ரூ.140.7 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. ராம் சரண் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment