3 டியூனையும் சேர்த்து ஒன்னா போடு, இதுதான் பாட்டு: தத்தளித்த சங்கர் கணேஷ்க்கு வழியாட்டிய எம்.ஜி.ஆர்: இந்த பாட்டு பெரிய ஹிட்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் -மஞ்சுளா நடிப்பில் வெற்றி நடை போட்ட திரைப்படம் "இதய வீணை" இதை படத்திற்கு இசையமைத்த கதையை பற்றி பார்க்கலாம் இந்த பதிவில்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் -மஞ்சுளா நடிப்பில் வெற்றி நடை போட்ட திரைப்படம் "இதய வீணை" இதை படத்திற்கு இசையமைத்த கதையை பற்றி பார்க்கலாம் இந்த பதிவில்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-12 230405

1950,60களில் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன். பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் நுழைந்தாலும் சுமார் 10 வருடங்களுக்கு பின்னரே அவர் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதுவரை கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

Advertisment

பஞ்சு – கிருஷ்ணன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து 1972ம் வருடம் வெளியான திரைப்படம் இதய வீணை. இப்படத்தில் மஞ்சுளா, சிவக்குமார், லட்சுமி, நம்பியார் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் சில காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

இப்படத்தின் பாடல் ஒன்றிற்காக சுமார் மூன்று மாதங்கள் வரை டியூன் ஒகே ஆகவில்லையாம். அதற்காக எங்களை பெண்டு நிமித்தினார் எம்.ஜி.ஆர் என்று ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை ஒரு நேர்காணலின் போது பகிர்ந்தார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். 

"பாட்டிற்கு டியூனை பாடிகாட்டுவதற்காக நங்கள் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றோம். உடனே இன்று ஒகே செய்து விடுவார் எனது மிகவும் சந்தோசஷமாக இருந்தோம். 

Advertisment
Advertisements

டியூனை பாட ஆரம்பித்தோம். மாறி மாறி எங்களை இந்த டியூனை வாசி அந்த டியூனை வாசி என்று விதவிதமாக எங்களை பாட வைத்து கொண்டு இருந்தார். கடைசியில் நாங்கள் வாசித்து காட்டிய மூன்று டியூன்களையும் ஒன்றாக சேர்த்து பாட சொன்னார். 

ஒரு வழியாக மூன்றையும் சேர்த்து பாடி கட்டினோம். இந்த டியூனை பைனல் பண்ணிக்கோங்க. பாடலை ரெகார்ட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். 

அப்படி மிகவும் கஷ்டப்பட்டு ஒகே பண்ண பாடல் தான் 'பொன் அந்தி மாலை பொழுது...' பாடல். சூப்பர் ஹிட்டானது அந்த பாடல்." என்றார் சங்கர் கணேஷ்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர், லட்சுமி மற்றும் சிவகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆனந்த விகடன் இதழில் வெளியான மணியன் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் ஒரு பகுதி காஷ்மீரில் படமாக்கப்பட்டது.

இந்த படம் வெளியாகி சென்னையில் மட்டுமன்றி மற்ற ஊர்களிலும் வசூலை குவித்தது. குறிப்பாக மதுரை தேவி திரையரங்கில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

மேலும், திருச்சி பேலஸ் தியேட்டர் மற்றும் கோவையில் இரண்டு திரையரங்கிலில் பல நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: