Advertisment

28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஏ.ஆர்.ரஹ்மான்... ஆனால் ஒரு மாற்றம் : மனம் திறக்கும் சங்கர் மகாதேவன்

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்தனர்.

author-image
WebDesk
New Update
Rahman

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் 28 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதோபோல்தான் இப்போதும் கடவுள் பயமுள்ள ஒரு நபராப இருக்கிறார் என்று பாடகர் சங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான இவர், ஆஸ்கார் விருது வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார். மேலும் இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருந்தாரோ அதேபோல் தான் இப்போதும் கடவுள் பயமுள்ள ஒரு நபராக இருக்கிறார். ஆனால் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அவரது பணிகள் பாரம்பரியமாக இல்லை என்று பாடகர் சங்கர் மகாதேவன் கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்திற்கு இசையமைத்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுடன் சங்கர் மகாதேவன் இணைந்து பணியற்றியுள்ளார்.

பம்பாய் படம் முதல் ரஹ்மான் இசையமைத்த அனைத்து படங்களுக்கு பாடல்கள் பாடி வரும் சங்கர் மகாதேவன், சமீபத்திய ஒரு பேட்டியில், ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் ரஹ்மானின் செயல்முறை பாரம்பரியமாக இல்லை. ஸ்டுடியோவில் நடந்த விஷயங்கள் மிகவும் "ஆர்கானிக் செயல்முறை". ரஹ்மானின் குருப்பில் உள்ளவர்கள் வெவ்வேறு முறையில் இசையை முயற்சி செய்வார்கள். நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்வார்கள். ஆனால் இறுதியில் படத்திற்கு எந்த இசை சரியாக இருக்கும் என்பதை ரஹ்மான் தான் முடிவு செய்வார்.

அதேபோல் 28 ஆண்டுகளில் ரஹ்மான் ஒரு தனி நபராக அவரது குணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் முன்பு போல் சுயநினைவுடன் இல்லை.இப்போதும் அவர் மிகவும் அடக்கமானவர்." மேடை பேச்சில் கூட அவரது நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம் ஒரு தனி நபராக, அவர் அதே அழகான ரஹ்மான், அடக்கமான ரஹ்மான், அதே கடவுள் பயமுள்ள ரஹ்மான். அதே இசையில் உற்சாகமான நபர். அதுவே அவரின் முக்கிய சிறப்பு என்று கூறியுள்ளார்.

ஒரு இசையமைப்பாளராக ரஹ்மானின் வளர்ச்சியைப் பற்றி பேசிய சங்கர் மகாதேவன், "அவர் எப்போதும் இசையை கற்றுக்கொள்ளும் ஒரு மாணவராகத்தான் இருக்கிறார். ஆனாலும் அவர் ஒரு இசைக்கலைஞராக, தொழில்நுட்ப நபராக எவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் என்பதை நீங்கள் பார்க்கலாம். "ஹார்மோனிக் மற்றும் இசைக்கருவிகளின் பயன்பாடு, மேற்கத்திய கிளாசிக்கல் இசைக்குழுவின் பயன்பாடு, நவீன கருவிகளின் பயன்பாடு ஆகியவற்றை பற்றி தினமும் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவராகத்தான் இருக்கிறார். என்று கூறியுள்ளார்

பம்பாய் படத்திற்காக ரஹ்மான் இசையமைத்தது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், உலகின் 10 சிறந்த படங்களில்  ஒன்றாக டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment